ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?

சென்னை: விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று மாலை டிரைலர் வெளியாகும் என காலையிலேயே படக்குழு அறிவித்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியாகும் 7 மணிக்கு வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களை மேலும் காக்க வைத்த விஜய்சேதுபதியிடம், நேரடியாகவே டிரைலர் எப்பா சார் விடுவீங்க என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் ட்வீட் போட ஆரம்பித்தனர்.

ஒருவழியாக தற்போது கடைசி விவசாயி டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காக்கா முட்டை மணிகண்டன்

காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படம் உருவாகியுள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை என வித்தியாசமான திரைக்கதைகளை விருது பெறும் படங்களாக இயக்கி வரும் மணிகண்டன் இயக்கத்தில் மற்றொரு சிறந்த படைப்பாக கடைசி விவசாயி உருவாகியுள்ளது.

யார் கடைசி விவசாயி?

கடைசி விவசாயி படத்தில் விஜய்சேதுபதி கடைசி விவசாயியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் கடைசி விவசாயியாக நல்லாண்டி எனும் முதியவர் படத்தின் நாயகனாக நடித்துள்ளது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது.

குட்டி சொர்ணாக்கா

டிக்டாக் வீடியோக்களில் கலக்கி வந்த குட்டி சொர்ணாக்கா கடைசி விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். டிரைலரில் அவர் இடம்பெற்றுள்ள காட்சி பார்வையாளர்களுக்கு மற்றொரு ஆச்சர்ய விஷயமாக அமைந்துள்ளது.

வித்தியாசமான விஜய்சேதுபதி

வித்தியாசமான விஜய்சேதுபதி

பில்கேட்ஸ் கிட்ட பேசிட்டியாப்பா என ஒருவர் கேட்க, நான் பேசிட்டேன் அவர் தான் என்கிட்ட பேசலன்னு இன்ட்ரோ கொடுக்கும் விஜய்சேதுபதி, டிரைலர் முழுவதும் வித்தியாசமான தோற்றத்தில், தனக்கே உரிய நக்கலான வசனங்களை பேசி நடித்துள்ளார். அதுவும் அந்த குரங்குக்கு இரட்டை வாழைப் பழத்தை கொடுத்து அவர் பேசும் வசனம் நிச்சயம் அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்.

கல்யாணி வயது 18

கல்யாணி வயது 18

யானை பாகனாக வரும் யோகி பாபு மற்றும் அவரது யானை செய்யும் குறும்புகள் நகைச்சுவையை கூட்டுகின்றன. அதிலும், யானைக்கு பெயர் என்ன என கேட்கும் நபரிடம், கல்யாணி வயது 18 என யோகி பாபு சொல்வது செம்ம காமெடி.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

கடைசி விவசாயியாக நடித்திருக்கும் நல்லாண்டியை ஏன் போலீஸ் விசாரிக்கிறது. அவர் யாரை கொலை செய்தார், நீதிமன்ற வழக்கில் இருந்து தப்பித்தாரா இல்லையா? தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகள் அவருக்கு புரிகிறதா இல்லையா? போன்ற விஷயங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும், இளையராஜாவின் இசையோடு கலந்து கட்டி கொடுக்கவுள்ளார் இயக்குநர் மணிகண்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X