twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய், அஜித் ரசிகர்களையே வியக்கவைத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    விஜய் சேதுபதிக்கு பிரமாண்ட கட்-அவுட்!

    சென்னை : விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் வயதான தோற்றத்தின் கட் அவுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அஜித், விஜய் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக சென்னை தியேட்டர் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது இந்த கட் அவுட்.

    விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் புகழ் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் சீதக்காதி.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது, 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, செக்கச் சிவந்த வானம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

    சீதக்காதி

    சீதக்காதி

    இதில், விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் 25-வது படமாக சீதக்காதி உருவாகி வருகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

    ஃபர்ஸ்ட் லுக்

    ஃபர்ஸ்ட் லுக்

    சமீபத்தில் விஜய் சேதுபதியின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இது போன்று வயதான தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் கட் அவுட்

    இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டது. அப்போது, அந்த திரையரங்கில் விஜய் சேதுபதியின் வயதான கெட்டப் அடங்கிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

    பாலாபிஷேகம்

    அதனைக் கண்ட ரசிகர்கள், விஜய் சேதுபதி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர். தற்போது, அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Vijay sethupathi giant cut out erected for shooting in chennai. Fans offered milk abhishekam for this cut-out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X