கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா? இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

சென்னை : கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படமும் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. இதனால் கவனிக்கப்படும் டைரக்டர்களில் ஒருவராகி விட்ட லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார்.

விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்ட நிலையில், இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்ட லாரன்ஸ், படத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகியதாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் விஷாலிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

உறுதி செய்த ஃபகத் ஃபாசில்

உறுதி செய்த ஃபகத் ஃபாசில்

பிறகு வில்லன் ரோலில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தான் நடிக்க போகிறார் என பலவிதமான தகவல்கள் மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. ஃபகத் ஃபாசிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கமலின் விக்ரம் படத்தில் தானும் இணைய உள்ளதாக அறிவித்தார். ஆனால் என்ன ரோல் என கூறவில்லை.

விக்ரமில் இணையும் விஜய் சேதுபதி

விக்ரமில் இணையும் விஜய் சேதுபதி

இதற்கிடையில் விக்ரம் படத்தில் தானும் நடிக்க உள்ளதாக விஜய் சேதுபதி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க என்னிடம் பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

விரைவில் முடிவு செய்யப்படும்

விரைவில் முடிவு செய்யப்படும்

எல்லாம் சரியாக நடந்து, கால்ஷீட் தேதியும் சரியாக அமைந்தால் இந்த படத்தில் நான் நடிப்பது உறுதியாகி விடும் என்றார். அத்துடன், அனைத்தும் சரியாக நடந்தால் 2 திறமையான நடிகர்களுடன் நானும் இணைவேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார்ஸ் படமா விக்ரம்

மெகா ஸ்டார்ஸ் படமா விக்ரம்

மொத்தத்தில் பல ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படமாக விக்ரம் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இருந்தாலும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X