உனக்குனு கொஞ்சம் காசு வெச்சுக்கடா.. தான தர்மம் செய்யும் KPY பாலாவுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ்!

சென்னை: நடிகர் KPY பாலா காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பேட் கேர்ள் போன்ற் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் காந்தி கண்ணாடி படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திய விஜய் சேதுபதி, KPY பாலாவுக்கு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

KPY பாலா பலருக்கும் உதவி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, தன்னிடம் யார் வந்து உதவி கேட்டாலும் அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர்களான உதவியைச் செய்து விடுவார். கல்வி, தொழில் அமைத்துக் கொடுப்பது, மருத்துவத்திற்கு நிதி திரட்டிக் கொடுப்பது என பாலா செய்து வரும் உதவிகள் ஏராளம்.

Vijay Sethupathi Gives Advice To KPY Bala at Gandhi Kannadi Movie Promotion

பாலா செய்யும் உதவி என்பது வள்ளுவனின் வாக்கு போல என்று கூறலாம். அதாவது, "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்பது போல என்று கூட கூறலாம். மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளிச்சம் இல்லாமல் சிரமத்தில் அல்லாடுவார்கள் என அவர்களுக்கு டார்ச் லைட்கள் கொடுத்து உதவினார். பாலாவின் உதவிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவர் யாருக்கு எல்லாம் உதவி செய்கிறார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதி அட்ட்வைஸ்: காந்தி கண்ணாடி படத்தின் புரோமோசனில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், KPY பாலாவுக்கு ஒரு அட்வைஸும் செய்தார். அதாவது, நிறைய பேருக்கு தானம் தர்மம் பண்றவன் கையில எப்பவுமே காசு இருந்துட்டு இருக்கனும். எல்லாத்தையும் கொடுத்தாலும் உனக்குனு கொஞ்சம் காசு வெச்சுக்கடானு சொல்லுவேன். நிறைய பேருக்கு உதவி பண்றவன் கீழ விழுந்தா, உதவி பண்ணனும்னு நினைக்கிற எல்லாருக்கும் பயம் வந்துடும். அந்த பயத்தை ஏற்படுத்தாம பார்த்துக்க" என்று கூறினார். விஜய் சேதுபதி இவ்வாறு கூறியது சரிதான் என்று பலருக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இலவச மருத்துவமனை: KPY பாலா தற்போது தனது சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். தான் சொந்த வீடு கட்ட வாங்கிய நிலத்தில், வீடு கட்டாமல் மருத்துவமனை கட்டியுள்ளார். மேலும் இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவமனை கட்டுவது என்பது தனது கனவு என்றும், வீடு கட்டினால் நானும் எனது குடும்பமும் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும், ஆனால் தற்போது இங்கு மருத்தும் பெறும் பலரது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Vijay Sethupathi Gives Advice To KPY Bala at Gandhi Kannadi Movie Promotion

ஏன் செப்., 5: சிவகார்த்திகேயன் போன்ற பெரிய ஸ்டார் படம் வெளியாகும் போது உங்கள் படத்தை ரிலீஸ் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு, அண்ணன் சிவகார்த்திகேயன் எப்போது டாப் தான். அவர் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். அவர் படத்திற்கு வரும் ரசிகர்கள் டிக்கெட் இல்லை என்றால் அடுத்து எங்கள் படத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் செப்டம்பர் 5ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X