ரொம்ப வயசாகிவிட்டது என்றவர்களின் பேச்சை கேட்காத கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ. 5 லட்சம்
Recommended Video
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.
தோஹாவில் நடந்த 23வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோமதிக்கு ரொக்கப் பரிசு அளித்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் கோமதியிடம் போன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லாபம்
விஜய் சேதுபதி லாபம் படப்பிடிப்பில் இருப்பதால் கோமதியை நேரில் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் உடனே அவருக்கு உதவி செய்ய நினைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை அனுப்பி வைத்துள்ளார்.

ரோபோ ஷங்கர்
முன்னதாக ரோபோ ஷங்கர் கோமதிக்கு ரூ. 1 லட்சம் அளித்தார். திரையுலக பிரபலங்கள் வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் அவர் தொடர்ந்து சாதிக்க உதவியாக நிதியுதவி அளிப்பது பாராட்டுக்குரியது.
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் குமார் கோமதியை நேரில் சந்தித்து பாராட்டியதோடு விளையாட்டு உபகரணங்களை பரிசளித்தார். வயது அதிகமாகுகிறது திருமணம் செய் என்று உறவினர்களும், தெரிந்தவர்களும் கூறியதை கோமதி கேட்காமல் இருந்தது நல்லதாகிவிட்டது. இல்லை என்றால் இப்படி தங்க மங்கையாகி இருக்க முடியுமா?


Click it and Unblock the Notifications











