எப்பவும் மக்கள் செல்வன் தான்.. கலைமாமணி விருது பெற்ற விஜய்சேதுபதி!
Recommended Video
சென்னை: பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நடிகர் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் இன்று வெளியாகவில்லை. அந்த துக்கத்தில் இருந்த நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று தலைமை செயலகத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் நடிகர் விஜய்சேதுபதிக்கு இந்த விருதை வழங்கினார். அவருடன் தேனிசை தென்றல் தேவாவும் உடனிருந்து அந்த விருதினை இணைந்து வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விருது விழாவில் நடிகர் விஜய்சேதுபதிக்கு 2017ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில், இன்று அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மக்கள் செல்வன்
ஸ்டார் அந்தஸ்த்து வந்த பிறகும் சாதாரண ஆளாக நடிகர் விஜய்சேதுபதி விளங்குவதால், அவரை மக்கள் செல்வன் என அன்புடன் அனைவரும் அழைக்கின்றனர். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி சக நடிகர்களின் படங்களும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றும் நினைக்கும் நல்ல மனசுக்கு சொந்தக்காரர் விஜய்சேதுபதி.

ரிலீசாகவில்லை
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி வெளியீடாக வரும் என்றார்கள் கடைசி நேரத்தில் வரவில்லை. விஷாலின் ஆக்ஷன் படத்துடன் நிச்சயம் இன்று வெளியாகிறது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தயாரிப்பு தரப்பு அறிவித்தும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி சங்கத்தமிழன் இன்றும் வெளியாகவில்லை.
கத்துக்கணும்
தனது படம் ரிலீசாகவில்லை என்ற வருத்தத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாடவும் இல்லை. அதே நேரத்தில் தனக்கு கலைமாமணி விருது கிடைத்துவிட்டது இன்று ஆடவும் இல்லை. பாலிவுட் ஜாம்பவான் நடிகர்கள் கோட்டு சூட் மாட்டி வந்தாலும், தன்னுடைய சிம்ப்ளிசிட்டியால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

நாளை
சங்கத்தமிழன் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் இன்று மாலைக்குள் தீர்ந்து நாளை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் இனியும் காலம் தாழ்த்தாமல் நாளை வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

தளபதி 64
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் டெல்லியில் பரபரப்பாக ‘தளபதி 64' ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாயகி மாளவிகா மோகனனும் அந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இதுவரை 'தளபதி 64' ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. மூன்றாம் கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











