twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லயோலா கல்லூரியில் மாணவர்கள் ‘தல’ன்னு கத்தியதால் டென்ஷனான விஜய்சேதுபதி.. என்ன ஆச்சு?

    |

    சென்னை: லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை சொல்லி வந்த நடிகர் விஜய்சேதுபதி திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியதும் மாணவர்கள் 'தல'என்று கத்தியதால் டென்ஷன் ஆகி விட்டார்.

    இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக கூடாது. சோஷியல் மீடியாவின் சுதந்திரத்தை நம்பி ஏமாறக் கூடாது என விஜய்சேதுபதி அட்வைஸ் கொடுத்து வந்தார்.

    அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மாணவர்கள் கத்தி கூச்சலிட்டதால், என்ன பேசிட்டு இருக்கோம்.. ஏன் இப்படி கத்துறீங்கன்னு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் 'அற்புதமான' பர்ஃபாமன்ஸ்..மிரண்டுபோய் பாராட்டும் ஹிர்த்திக் ரோஷன் விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் 'அற்புதமான' பர்ஃபாமன்ஸ்..மிரண்டுபோய் பாராட்டும் ஹிர்த்திக் ரோஷன்

    லயோலா கல்லூரியில் விஜய்சேதுபதி

    லயோலா கல்லூரியில் விஜய்சேதுபதி

    நடிகர் விஜய்சேதுபதி லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான ஏகப்பட்ட நல்ல விஷயங்களை தனது மனதிலிருந்து வெளிப்படையாக அவர் பேசியது பலரையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் விஜய்சேதுபதியை வெகுவாக கடுப்பேற்றியது.

    நான் குடிக்கிறேன் நீங்க குடிக்காதீங்க

    நான் குடிக்கிறேன் நீங்க குடிக்காதீங்க

    நிகழ்ச்சியில் மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என பேசினார் விஜய்சேதுபதி. தனக்கு மதுப்பழக்கம் உண்டு, ஆனால், அது நல்லது அல்ல, உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. மாணவர்கள் யாரும் அதனை முயற்சித்து அதில் மூழ்கிப் போக வேண்டாம். எனக்கும் இப்படி நல்லது சொன்னாங்க, நான் கேட்கல, இப்போ ஃபீல் பண்றேன்.. நீங்களாவது கேளுங்க என பேசினார்.

    சோஷியல் மீடியா உங்களை திருடுது

    சோஷியல் மீடியா உங்களை திருடுது

    சோஷியல் மீடியாவில் சுதந்திரம் கொடுப்பது போல கொடுத்து உங்களை எல்லாம் அதில் வரவழைத்து உங்கள் நேரத்தையும், காலத்தையும் அது உங்களுக்கு தெரியாமலே திருடுது. நீங்கள் அனைவரும் அதை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், அது தனது வியாபாரத்தை உங்களை வைத்தே ஜோராக நடத்தி வருகிறது. ட்ரோல்களையும் சோஷியல் மீடியா சண்டையையும் போடுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக உங்கள் நேரத்தை செலவிடுங்கள் என விஜய்சேதுபதி அட்வைஸ் செய்தார்.

    திருக்குறள் உதாரணம்

    திருக்குறள் உதாரணம்

    மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய்சேதுபதி, கேட்பது (listening) என்பது மிகவும் முக்கியமான ஒன்று. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் தனக்கு ரொம்பவே பிடித்த திருக்குறள் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்.. செல்வத்துள் எல்லாம் தலை" என்கிற குறளை மேற்கோள் காட்டி பேசியதும் மாணவர்கள் 'தல'என்று கத்த தொடங்கிவிட்டனர்.

    டென்ஷனான விஜய்சேதுபதி

    டென்ஷனான விஜய்சேதுபதி

    இப்போ நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஏன் 'தல'ன்னு கத்திட்டு இருக்கீங்க.. போங்கப்பா என சட்டென மாணவர்கள் நடிகர் அஜித்தை நினைத்து 'தல' என கத்துகின்றனர் என்பதை புரிந்து கொண்டதும் சில நிமிடங்கள் டென்ஷனான அவர் மீண்டும் தலை தான் உடம்புக்கு முக்கியமான பாகம். அதனால், தான் திருவள்ளுவர் அப்படி சொல்லி இருக்கிறார் என பேசி விட்டு தனது உரையை முடித்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பினார்.

    விடு’தலை’

    விடு’தலை’

    வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்து வரும் படத்தின் டைட்டிலும் விடு'தலை' என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் அந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் உடன் ஒரு படத்திலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay Sethupathi got tensed after Loyala college students shouted 'Thala' while he speeking a advise speech and pointed out a Thirukural. Vijay Sethupathi will next seen in Vetrimaran's Viduthalai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X