கத்ரீனா கைஃப் பக்கத்துல வச்சுக்கிட்டு அந்த கேள்வி.. சட்டென சூடான விஜய் சேதுபதி.. என்ன ஆச்சு?

சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி குறித்த கேள்வியால் திடீரென நடிகர் விஜய்சேதுபதி கடுப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக இந்தி படத்தில் நடித்து இருந்தார். ஏற்கனவே மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் மற்றும் ஃபர்ஸி வெப்சீரிஸ் என தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்ததாக மெரி கிறிஸ்துமஸ் எனும் பாலிவுட் படத்தை புரமோட் செய்ய வந்துள்ளார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி படத்தில் நடிக்கிறீங்களே, தமிழர்களின் எண்ணமே இந்தி தெரியாது போடா தானே என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப விஜய்சேதுபதி கடுப்பாகி விட்டார்.

Vijay Sethupathi got tensed over why you acted in Hindi movies question

கத்ரீனா கைஃப் உடன் முத்தக் காட்சி: தமிழ் மற்றும் இந்தியில் இரண்டு வித்தியாசமான டிரெய்லர் கட் செய்யப்பட்டு இருந்தது. இந்தி டிரெய்லரில் விஜய்சேதுபதிக்கு கத்ரீனா கைஃப் முத்தம் கொடுத்த காட்சி இருந்ததே தமிழில் ஏன் இல்லை என்றும் படம் எப்படி இருக்கும் என கேட்ட கேள்விக்கு சிரித்த விஜய்சேதுபதி, அந்த ஒரு சீன் மட்டும் தான் உங்களுக்குத் தெரிந்ததா? எனக் கேட்டார். படத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

கத்ரீனா கைஃப் அப்படி ராதிகா ஆப்தே இப்படி: கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா ஆப்தே மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ள நிலையில், இருவரும் எப்படி என்கிற கேள்விக்கு பதில் அளித்த விஜய்சேதுபதி ராதிகா ஆப்தே ரொம்பவே கூலான பர்சன். அதே நேரத்தில் கத்ரீனா கைஃப் ரொம்பவே சீரியஸான நபர் என்று படாரென பதில் அளித்தார்.

Vijay Sethupathi got tensed over why you acted in Hindi movies question

பாலிவுட்டில் நல்ல மரியாதை: பாலிவுட்டுக்கு தமிழ் நடிகர்கள் சென்றால் அங்கே மரியாதை கிடைக்காது என்பார்களே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்கிற கேள்விக்கு நான் இதுவரை 5 படங்கள் நடித்து விட்டேன். நல்ல மரியாதை தான் கிடைக்கிறது. முன்பு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஓடிடி வந்த பிறகு எந்தவொரு லேங்குவேஜ் பேரியரும் இல்லை என்று தான் தெரிகிறது என்றார்.

டென்ஷனான விஜய்சேதுபதி: மறுபடியும் இன்னொரு பத்திரிகையாளர் தமிழ்நாட்டில் எல்லாரும் இந்தி தெரியாது போடான்னு சொல்றாங்க நீங்க மட்டும் ஏன் இந்தி படங்களில் நடிக்கிறீங்க என கேட்டதும் கடுப்பாகி விட்டார் விஜய்சேதுபதி. இந்த கேள்வியே தப்பு என்றும் தமிழ்நாட்டில் யாருமே இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். அமீர் கான் வரும்போதும் நீங்க இதே கேள்வியைத்தானே கேட்டீங்க, இதைத்தவிர உங்களுக்கு கேட்க ஏதும் தெரியாதா என அந்த பத்திரிகையாளரை திட்டித் தீர்த்து விட்டார் விஜய்சேதுபதி. மகன் குறித்த கேள்விக்கும் அவரே சொல்வார் என்றும் என்னிடம் கேட்காதீங்க என்றும் சொல்லி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X