விஜய் சேதுபதி -ஹெச் வினோத் இணையும் படம்.. எப்படிப்பட்ட கதைக்களம் தெரியுமா.. சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரை 3வது முறையாக இயக்கி வருகிறார் இயக்குநர் ஹெச் வினோத்.
அதேபோல இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக அஜித்துடன் தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர் ஹெச் வினோத் விஜய் சேதுபதியுடன் இணைவது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச் வினோத்
தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின்மூலம் சிறப்பான கவனத்தை பெற்று கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார் ஹெச் வினோத். இந்தப் படம் இவருக்கு நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. முதலில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை அஜித் நடிப்பில் கொடுத்தார்.

பிங்க் படத்தின் ரீமேக்
பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு ஹெச் வினோத்திற்கு கிடைத்தது. வலிமை படத்தின்மூலம் மீண்டும் அஜித்துடன் இணைந்தார் ஹெச் வினோத். இந்தப் படத்தில் சென்டிமெண்ட் மற்றும் பைக் ரேசிங் அதிகமாக இருந்தது.

கலவையான விமர்சனங்களை பெற்ற வலிமை
இதனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை. கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது. இதையடுத்து தற்போது மீண்டும் ஹெச் வினோத்துடனேயே அஜித் கூட்டணி அமைத்துள்ளார். ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஏகே61 படம்
இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங் புனேவில் நடைபெறவுள்ளது. இதில் அஜித் இரட்டை கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். முதல் கெட்டப் புகைப்படங்கள்மூலம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அடுத்த கெட்டப்பை ரகசியமாக வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்தே புனேவில் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் இணையும் ஹெச் வினோத்
இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து படம் இயக்கவுள்ளார் ஹெச் வினோத். இந்தப் படம் உறுதியான நிலையில், படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. த்ரில்லர் வகை படமாக இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

த்ரில்லர் கதைக்களம்
சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவாகவுள்ள இந்தப் படம், பல ட்விஸ்ட்கள் மற்றும் திருப்பங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. அஜித் படம் நிறைவு பெற்றவுடன் இந்தப் படத்தின் சூட்டிங் உடனடியாக துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











