Vijay Sethupathi: கமல், கார்த்தியால் அப்செட்டான H வினோத்.. சரியான நேரத்தில் உதவி செய்த விஜய் சேதுபதி
சென்னை: கமலின் 233வது படத்தை H வினோத் இயக்குவதாக இருந்தது. அதன்படி KH 233 என்ற டைட்டிலில் உருவாகவிருந்த இந்தப் படம் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இதனால் கார்த்தியின் தீரன் அதிகாரம் 2ம் பாகத்தை இயக்கவிருந்தார் H வினோத். ஆனால், தற்போது அதுவும் தாமதமாகும் என தெரிய வந்ததை அடுத்து ரொம்பவே அப்செட்டாகிவிட்டார் H வினோத்.
கமல், கார்த்தியால் அப்செட்டான H வினோத்: சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் H வினோத். முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த H வினோத், அடுத்து தீரன் அதிகாரம் மூலம் பக்கா ஆக்ஷன் விருந்து படைத்தார். அதன்பின்னர் அஜித்துடன் ஐக்கியமான H வினோத், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை இயக்கினார். இதனால் ஐந்தே படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் லிஸ்ட்டில் இணைந்தார்.

இதனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணையும் வாய்ப்பு H வினோத்துக்கு கிடைத்தது. அதன்படி கமலின் KH 233 படத்தை H வினோத் இயக்கவுள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனருக்காக H வினோத் இயக்கவிருந்த இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கமலின் 233வது படம் ட்ராப் ஆனதால் உடனடியாக பிளானை மாற்றிய H வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் 2ம் பாகத்தை இயக்கவிருந்தார். இதற்கான கதை, திரைக்கதை ரெடியாகவிருப்பதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்தாராம். ஆனால், கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் தீரன் அதிகாரம் 2ம் பாகம் தொடங்குவதிலும் வினோத்துக்கு சிக்கல் இருந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த H வினோத்துக்கு விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் H வினோத் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது அந்தப் படத்தை உடனடியாக தொடங்கலாம் என விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தில் யோகி பாபுவும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிட்டிக்கல் ஜானரில் காமெடியாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். சின்ன பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தை 2024 இறுதிக்குள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில் விரைவில் விஜய் சேதுபதி, யோகி பாபு, H வினோத் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











