ஓராண்டை கடந்த மாஸ்டர் படம்... வீடியோ ஷேர் செய்த வில்லன்

சென்னை : நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியான படம் மாஸ்டர்.

Recommended Video

ஓராண்டை கடந்த மாஸ்டர் படம்... வீடியோ ஷேர் செய்த வில்லன்

இந்தப் படத்தில் வித்தியாசமான வாத்தியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் விஜய்.

படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவருக்கும் பவர்புல்லான கேரக்டர் அமைந்திருந்தது.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியான படம் மாஸ்டர். படத்தில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நடக்கும் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அதை சரிசெய்யும் வாத்தியாக நடித்திருந்தார் விஜய்.

மிரட்டல் வில்லன்

மிரட்டல் வில்லன்

அவருக்கு சிறப்பான டப் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. மிரட்டலான வில்லனாக அவர் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அவர் படத்தில் புரபசராக நடித்திருந்தார்.

வித்தியாசமான விஜய்

வித்தியாசமான விஜய்

படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் விஜய். படத்தில் மதுவருந்தி பின்பு மனம் வருந்தி அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவந்து சிறுவர்களை நல்வழிப்படுத்தும் கேரக்டர் அவருக்கு. மாணவர்களின் விருப்பத்திற்குரியவராகவும் அவர் நடித்திருந்தார்.

ஓராண்டு நிறைவு

ஓராண்டு நிறைவு

உண்மையில் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக விஜய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வீடியோ பகிர்ந்த விஜய் சேதுபதி

வீடியோ பகிர்ந்த விஜய் சேதுபதி

இந்நிலையில் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தின் ஓராண்டு நிறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

சூட்டிங் வீடியோ

சூட்டிங் வீடியோ

அதில் க்ளைமாக்ஸ் காட்சிக்கு தயாராகும் விஜய் சேதுபதி மற்றும் விஜய்யை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் காட்சிகளை விளக்குகிறார். ஸ்டண்ட் மாஸ்டரும் காட்சிக்காக தயாராவது போல அந்த வீடியோ காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X