நயன்தாராவுக்காக ஓக்கே சொன்ன விஜய் சேதுபதி... பக்கா ப்ளான் போடும் விக்கி... அடுத்து ஷூட்டிங் தான்!

சென்னை: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62-வை இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன்.

ஆனால், அஜித் - லைகா தரப்பில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்டது.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து துவண்டுவிடாமல் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிய விக்கி, விஜய் சேதுபதிக்காக பக்கா ப்ளான் போட்டு வைத்துள்ளாராம்.

விக்னேஷ் சிவனின் இயக்குநர் கனவு

விக்னேஷ் சிவனின் இயக்குநர் கனவு

சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் வெளியான பிறகே பிரபலமானார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இந்தப் படத்தின் ஷூட்டிங் போதுதான் விக்கியும் நயனும் காதலிலும் விழுந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா, கூடுதலாக சமந்தா கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்கி.

கைநழுவிப் போன ஏகே 62

கைநழுவிப் போன ஏகே 62

கடந்தாண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார் விக்கி. இடையே நயனுடன் திருமணம், இரட்டை குழந்தைகள் என மகிழ்ச்சியில் இருந்த விக்கிக்கு, திடீரென அதிர்ச்சி கொடுத்தது ஏகே 62 டீம். அஜித், லைகா இரண்டு தரப்புக்கும் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக, விரக்தியாகிவிட்டார் விக்கி.

நயனுக்காக ஓக்கே சொன்ன விஜய் சேதுபதி

நயனுக்காக ஓக்கே சொன்ன விஜய் சேதுபதி

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கிவிட்டால் கோலிவுட்டில் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே போய்விடலாம் என நினைத்த விக்கிக்கு, இது ஷாக்கிங் மேல் ஷாக்கிங்காக அமைந்தது. இதனால் துவண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு சப்போர்ட்டாக நயன்தாரா களமிறங்கியுள்ளாராம். ஏகே 62 ரிலீஸாகும் முன்பே விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக விஜய் சேதுபதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளாராம் நயன். அவரும் நயனுக்காக ஓக்கே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்கு ரெடியான விக்னேஷ் சிவன்

படப்பிடிப்புக்கு ரெடியான விக்னேஷ் சிவன்

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மட்டும் இல்லாமல், பிரதீப் ரங்கநாதனும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் விஜய் சேதுபதி. ஆனால், அங்கே சம்பளப் பிரச்சினை இருந்ததால், அதனை தெரிந்துகொண்ட நயன் விஜய் சேதுபதிக்கு பல கோடிகளை கொடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் லாக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சுந்தர் சியும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க ரெடியாகிவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்

ஏற்கனவே நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் விக்னேஷ் சிவனுக்காக கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த முறை நயனுக்காகவும் விக்கியுடன் இணைய ஓக்கே சொல்லியதாக தெரிகிறது. இந்தப் படத்தை ஹிட் கொடுத்தால் மட்டுமே விக்னேஷ் சிவனும் ஃபீல்டில் நீடிக்க முடியும் என்பதால், நயன்தாராவையே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க விக்கி முடிவு செய்துவிட்டாராம். முன்னதாக அஜித்தின் ஏகே 62 வாய்ப்பும் நயன்தாராவால் தான் விக்கிக்கு கிடைத்ததாக சொல்லப்பட்டது.

கன்னடத்தில் விஜய் சேதுபதி

கன்னடத்தில் விஜய் சேதுபதி

இதனிடையே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் மட்டும் நடித்துவந்த விஜய் சேதுபதி, முதன்முறையாக கன்னடத்திலும் அறிமுகமாகவுள்ளாராம். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் வில்லனாக அறிமுகமான விஜய் சேதுபதி, இப்போது கன்னடத்திலும் வில்லனாக என்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X