விஜய்சேதுபதி மீது பாலியல் புகார்.. பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? மௌனம் கலைத்த நடிகர்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதி மீது பாலியல் ரீதியினால குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய விஜய்சேதுபதி, தனது அசாத்தியமான நடிப்பால், தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு ஹீரோ என்கிற நிலைக்கு உயர்ந்தார். அமைதியான சுபாவம் கொண்ட விஜய்சேதுபதி, யாரிமுடமும் ஹீரோ என்கிற பந்தா இல்லாமல், இயல்பாகவே பழகி வருகிறார். இதனால் தான் விஜய்சேதுபதியை ரசிகர்கள் மக்கள் செல்வன் என கொண்டாடி வருகின்றனர். இவர் எப்போதும், சமூக கருத்துக்கள் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் விஜய் சேதுபதி மீது, எழுந்து இருக்கும் பாலியல் புகார், சினிமா வட்டாரத்தையை திக்குமுக்காட வைத்துள்ளது.

Vijay Sethupathi Thalaivan thalaivi
Photo Credit:

மோசமானவர்: ரம்யா மோகன் என்கிற பெண், தனது எக்ஸ் தள பக்கத்தில் தனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை விஜய் சேதுபதி கெடுத்துவிட்டதாக கூறியிருந்தார். மேலும், விஜய் சேதுபதி ஒரு மோசமான கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், போதை பொருள் பழக்கம், பாலியல் சீண்டல், படுக்கைக்கு அழைத்தால் போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதில், விஜய்சேதுபதி ஒன்னும் புனிதர் இல்லை. கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பயன்படுத்தினார். இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது.

கேரவனுக்கு 2 லட்சம்: விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் சீண்டல் ஒன்றும் ஜோக் இல்லை என்றும், நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி, இச்சைக்கு இனங்க சொல்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது என பதிவிட்டு இருந்தார். ரம்யா மோகனின் இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் எப்படி விஜய்சேதுபதி பற்றி இப்படி குற்றத்தை சுமத்த முடியும் என கேள்வி கேட்டதை அடுத்து, சில மணி நேரங்களில், அந்த பதிவு நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், ஒருவர் மீது குற்றம்சாட்டிய பிறகு, அதற்கு என்ன ஆதாரம் என்பதை கேட்பது முட்டாள் தனமாக இருக்கிறது. நான் விஜய் சேதுபதி மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்றார். சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகை நீக்குவதாக குறிப்பிட்டு இருந்தார்.

அசிங்கமான குற்றச்சாட்டு: இதற்கு விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது பொய் என்று தெரியும். இந்த அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. ஆனால், என் குடும்பத்தினரும், என் நண்பர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அந்த பெண்ணைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காக அவர் இப்படி செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கும். அதை அவர் அனுபவித்துக் கொள்ளட்டும். இன்று ஒரு சமுகவலைதளக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் பேசலாம். தலைவன் தலைவி படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால், என் பெயருக்கு கலங்கதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X