twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா துறையின் துயர வீடியோ ..விஜய் சேதுபதி வெளியிட்ட குறும்படம் !

    |

    சென்னை : திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் படும் கஷ்டத்தை பற்றிய வீடியோ ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    சினிமா துறையின் துயர வீடியோ ..விஜய் சேதுபதி வெளியிட்ட குறும்படம் !

    தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை திரையுலகமும் தற்பொழுது இந்த நோய்த்தொற்று பரவலின் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது.

    நடிகர் வெற்றி எழுதி இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் சினிமாத்துறையை நம்பியுள்ள தினக்கூலிகள் வேதனையிலும் வறுமையிலும் வாடி உள்ளனர்.

    இணையத்தில் புது முயற்சி .. மஞ்சிமா மோகனின் இணையத்தில் புது முயற்சி .. மஞ்சிமா மோகனின் "ஒன் இன் எ மில்லியன்" திறமைக்கான ஒரு தளம் !

    தேவையான ஒன்று

    தேவையான ஒன்று

    கடந்த சில மாதங்களாக அனைத்து படப்பிடிப்புகளும் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் திரைத்துறையை மட்டுமே நம்பியுள்ள பலரது குடும்பங்கள் தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் எந்த ஒரு காட்சிகள் எடுப்பதாக இருந்தாலும் அதற்கு துணை கதாநாயகர்களும் பேக் ரவுண்ட் ஆர்டிஸ்ட்களும் இல்லாமல் எடுப்பது மிகமிக கடினம். அவ்வாறு திரைப்படங்களில் காட்டப்படும் அனைத்து சுற்றுச்சூழல் காட்சிகளிலும் தேவையான கலைஞர்கள் இல்லாமல் எடுப்பது இயலாத காரியம்.

    அனுமதி நிறுத்தப்பட்டது

    அனுமதி நிறுத்தப்பட்டது

    சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் வெறும் 60 பேரை மட்டும் வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொற்றின் வீரியம் அதிகரித்து வர சின்னத்திரை படப்பிடிப்புகளும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடிகர் நடிகைகள் மட்டுமில்லாமல் அதற்கு பின்னால் பல தினக்கூலி உழைப்பாளர்களின் உழைப்பு உள்ளது. அவர்கள் தினமும் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.

    வீரர்களாகவும்

    வீரர்களாகவும்

    சூட்டிங் எல்லாம் ஆரம்பிச்சாலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் இல்லாமல் படப்பிடிப்புகளை எடுப்பது மிகவும் கடினம். அவர்களெல்லாம் இல்லாமல் எந்த ஒரு காட்சியும் நினைத்துக்கூட பார்க்க முடியாது போர்க்களத்தில் வீரர்களாகவும், ஹாஸ்பிடல்ல நோயாளியாகவும், கோர்ட்டில் வக்கீல்களாகவும் என இருபதாம் நூற்றாண்டில் திரைப்படங்கள் உருவான காலத்திலேயே பின்னால் இருக்கும் கதாபாத்திரங்களும் உருவாகிவிட்டது.

    தூங்காமல் வேலை

    தூங்காமல் வேலை

    இவ்வாறு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் இருந்து இரவும் பகலும் தூங்காமல் வேலை செய்யும் லைட்மேன், தனது உயிரை துச்சமாக நினைக்கும் ஸ்டாண்ட் மேன், இவருடன் இணைந்து ஆர் டைரக்சன், மேக்கப் என மொத்தம் 24 டிபார்ட்மெண்ட்கள் உள்ளன. இதில் இருக்கும் பலருக்கும் சினிமா துறையை தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமா மட்டும்தான்.

    வாழ்கின்றனர்

    வாழ்கின்றனர்

    இவ்வாறு ராத்திரி பகல் பாராமல் தொய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்த படப்பிடிப்பு தொழிலாளர்கள் தற்பொழுது வருமானம் ஏதும் இல்லாமல் இருட்டில் வாழ்கின்றனர். இவர்களெல்லாம் தங்களுக்கான விடியல் எப்போது விடியும் என காத்துக்கொண்டு படப்பிடிப்புக்கள் எப்போது துவங்கும் என நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கின்றன.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    இவ்வாறு படப்பிடிப்பு தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அவர்கள் தற்போது வேலையில்லாமல் படும் கஷ்டத்தையும் எடுத்துச் சொல்லும் குறும்படமான இதை நடிகர் வெற்றி எழுதி இயக்கியிருந்தார். திரைத்துறையில் தனது உழைப்பால் உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி இந்த குறும்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Vijay Sethupathi has released a short film on his Instagram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X