Vijaysethupathi: அரசன் படத்தில் எனது கதாபாத்திரம்.. மனம் திறந்த விஜய்சேதுபதி!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்' படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், விஜய்சேதுபதி தனது கேரக்டர் குறித்து பேசி உள்ளார்.
சிம்பு முதன் முதலாக வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்திருக்கும் படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், வடசென்னை யுனிவர்ஸின் கதைகளுள் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அரசன் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பு 24ந் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்திற்காக சிம்பு, இளமையான தோற்றத்திலும், நடுத்தர வயதானவரின் தோற்றத்திலும் நடிக்கிறார். இளமை தோற்றம் க்ளீன் ஷேவ் செய்தும், நடுத்தர வயது தோற்றத்திறற்கு தாடி மீசையுடனும் சிம்புவின் நியூ லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விஜய்சேதுபதிக்கு ரோல் என்ன? இந்நிலையில், ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, அரசன் படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி பேசி உள்ளார். அதில், அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். அதை என்னிடம் சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்யும்போது நிறைய விஷயத்தை கற்றுக்கொள்ள முடியும். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்வது என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். படப்பிடிப்பு எத்தனை நாட்கள் இருக்கும் என தெரியாது என்று விஜய்சேதுபதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அரசன் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களில் சென்னையில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்தளவிற்கு விரைவாக இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாக படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தை வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரசன் படக்குழுவினர் மிகவும் பரபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











