அட இது செமயா இருக்கே.. விஜய் சேதுபதி எடுத்திருக்கும் புதிய அவதாரம் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம் குறித்து தெரியவந்திருக்கிறது.
சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.
இனி ஹீரோதான்: மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஓடிடியிலும் நேற்று வெளியானது. இந்த சூழலில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர் இப்போது மகாராஜா, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். மேலும் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் அவதாரம்: இந்நிலையில் விஜய் சேதுபதி பாடகராக அவதாரம் எடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அவதார் என்பதவர் கரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறிறிருக்கும் காதல் குமாரு என்ற பாடலை பாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் அட செமயா விஜய் சேதுபதி பாடிருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்து தங்களது வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











