“விக்ரம்“ விஜய்சேதுபதிக்கு மூன்று பொண்டாடியா ?.. அட மனுஷன் வாழ்ந்து இருக்காரே ?
சென்னை : விக்ரம் படத்தில் விஜய்சேபதிக்கு மூன்று பொண்டாடி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில், கமலுடன் , விஜய்சேதுபதி, பக்த் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விக்ரம்
கமலஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில் அமர் ரோலிலும், கமல்ஹாசன் அருண்குமாராகவும் நடித்துள்ளனர். கைதி, மாஸ்டர் திரைப்படத்தை விட விக்ரம் படம் மெர்சலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதியின் மாஸ் நடிப்பு
முதல் பாதியில் ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி பட்டையை கிளப்பி இருந்தனர். குறிப்பாக விஜய்சேதுபதி சட்டை இல்லாமல் கெத்தாக நடந்து வரும் கதாபாத்திரம் அறிமுக காட்சியில் கைதட்லை அள்ளிவிட்டார். கஞ்சா தொழிற்சாலையை நிர்வகித்துக்கொண்டு மூன்று மனைவிகளுடன் 60க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்களுடன் சிறிய கிராமத்தையே நடத்தி வருகிறார் விஜய்சேதுபதி.

புது அவதாரம்
இதில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரியுடன் மனுஷன் வாழ்ந்து இருக்கிறார். எதிரிகளிடம் சண்டை போடுவது , அடிவாங்கிக்கொண்டு விழுவதும், கஞ்சாவை சாப்பிட்டபின் புரூஸ்லி போல எதிரிகளை அடித்து தும்சம் செய்வது என ஒவ்வொரு காட்சியிலும் விஜய்சேதுபதி தனி அவதாரமே எடுத்து நடித்து இருக்கிறார். விக்ரம் படத்தில் அவரின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மூன்று பொண்டாட்டியா ?
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த விஜேமகேஸ்வரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்சேதுபதி மூன்று மனைவிகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து கொள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல்ல ரெண்டு, இதுல மூணா மனுஷன் வாழுராய்யா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video

வெறித்தனம்
ஆண்டவரை வைத்து லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்து விட்டதாகவும் படம் செம்ம என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி வெறித்தனம் என்றும் இரண்டாவது பாதி டெர்ரிஃபிக் என்றும் கமெண்டுகள் இணையத்தில் குவித்து வருகின்றனர். விக்ரம் படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாத, திரைப்பிரபலங்களும் ரசிகர்களோடு ரசிகர்களான படம்பார்த்தனர்.


Click it and Unblock the Notifications











