லவ் யூ சார்.. இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் மறைவு.. உருகி, உடைந்துப் போன விஜய்சேதுபதி!
சென்னை: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்து நடிகர் விஜய்சேதுபதி உருகி, உடைந்து போயுள்ளார்.
Recommended Video

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் இரு படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி பதிவிட்டுள்ள உருக்கமான ட்வீட் வைரலாகி வருகிறது.

இரண்டு படங்கள்
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு எனும் பொதுவுடமை, லாபம் உள்ளிட்ட இரு படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. லாபம் படம் இன்னும் திரைக்கு வராத சூழலில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாகி இருந்த இயக்குநர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது நடிகர் விஜய்சேதுபதியை வெகுவாக பாதித்துள்ளது.

தட்டி எழுப்பினார்
உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் மயங்கி கிடந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐசியூவில் அசைவின்றி இருந்த எஸ்பி ஜனநாதனை பார்த்து நொந்து போன விஜய்சேதுபதி அவரை தட்டி எழுப்ப முயற்சித்ததாகவும் நான் அழைத்தால் என் இயக்குநர் எழுந்து வருவார் என்றும் விஜய்சேதுபதி கூறியதாக நடிகை காதல் சந்தியா தெரிவித்த தகவல் ரசிகர்களை உருக வைத்தது.

லவ் யூ சார்
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் லவ் யூ சார் எஸ்பி ஜனநாதனின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான ட்வீட் போட்டுள்ளார். எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் கடைசியாக பணியாற்றிய அனுபவங்கள் நடிகர் விஜய்சேதுபதிக்கு எப்போதுமே மறக்காது என ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

லாபம் வெற்றிபெறும்
இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் வெற்றிகரமாக விரைவில் திரைக்கு வந்து வெற்றி பெறும் என்றும் விஜய்சேதுபதி மற்றும் எஸ்பி ஜனநாதனின் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











