பேச பேச 50 ஆயிரத்தை தூக்கிக் கொடுத்த விஜய் சேதுபதி.. இந்த மனசுக்கே.. மனுஷன் நல்லாயிருக்கனும்!
சென்னை: பிரபலங்கள் பலருக்கும் உதவும் தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவது இல்லை. சிலர் தாங்கள் செய்யும் உதவிகளை அறிவிப்பார்கள், சிலர் அறிவிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் சேதுபதி ஒருவரிடம் பேசிக் கொண்டு இருக்கும்போதே, ரூபாய் 50 ஆயிரத்தை தூக்கிக் கொடுத்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தான் கொடுத்த 50 ஆயிரத்தின் மூலம், அதைப் பெற்றுக் கொண்டவர் முதலாளியாக மாறியுள்ளார். இது குறித்து காணலாம்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் 7 வாரங்கள் நிறைவடைந்துவிட்டது. இதில் 7வது வாரத்தில் போட்டியாளர் கெமி எலிமினேட் செய்யப்பட்டார். அவரது எலிமினேஷன் போட்டியாளர்களுக்கே ஷாக் கொடுத்தாலும், கெமி கண்ணீருடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்படி இருக்கும்போது கெமி பிக் பாஸ் மேடையில் விஜய் சேதுபதியை கெமி சந்தித்தபோது, விஜய் சேதுபதி தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழட்டி கெமிக்கு கொடுத்தார். கெமி அதை வாங்கி அணிந்த போது, மிகவும் அழகாக தெரிந்தார். இதை தான் துபாய் விமான நிலையத்தில் வாங்கியதாக விஜய் சேதுபதி தெரிவித்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. இது குறித்த பேச்சுக்களும் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் சேதுபதி, பரிசல் ஓட்டும் தொழிலாளியை, அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, முதலாளியாக மாற்றியுள்ளார். இது தொடர்பாக அந்த பரிசல் ஓட்டும் தொழிலாளி பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள் உட்பட பல முன்னணி நடிகர்கள் என் முன்னாடி இருக்குற இந்த வீட்டுக்கு ஷூட்டிங்க்கு வந்திருக்காங்க. நான்தான் அவங்களை ஏரியைக் கடந்து செல்ல ஒரு படகில் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போவேன். அவங்க எல்லாரும் திரும்பி போறப்போ எனக்கு ஏதாவது தருவேன்னு சொல்லுவாங்க. அதேபோல எதாவது தந்தவங்களும் இருக்காங்க, கண்டுக்காமலே போனவங்களும் இருக்காங்க.

பரிசல் ஓட்டும் தொழிலாளி: தமிழ் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தடவை ஷூட்டிங்க்கு வந்திருந்தாங்க. ஷூட் முடிஞ்சு, நான் அவரை ஒரு படகில் அக்கரைக்கு கூட்டிட்டுப் போயிட்டுருக்கிறப்போ, இந்தப் படகு உங்களுடையதான்னு கேட்டார். இல்ல இது வாடகைக்கு ,ஒரு நாளைக்கு இவ்வளவு வாடகை கொடுக்கணும்னு சொன்னப்போ, அவர் என்னைக் கேட்டார். இதை சொந்தமா வாங்க எவ்வளவு செலவாகும்? நான் சொன்னேன், அதுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகுமுன்னு சொன்னேன்.
உதவி: அப்போ அங்க, படகில வச்சே 50,000 ரூபாய்க்கு ஒரு காசோலை எழுதி என்கிட்ட கொடுத்தார். இனி சொந்த படகை ஓட்டுங்கன்னு சொன்னாரு. கஷ்டப்பட்டு ஜெயிச்சவங்களுக்கு தான் வாழ்க்கையின் வலி தெரியும்" என்று எக்ஸ் பக்கத்தில் விஜய் சேதுபதி செய்த உதவி குறித்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள். விஜய் சேதுபதி இவ்வாறு உதவி செய்ததை கேள்விப்பட்ட பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











