ரொம்ப பேசுனா வலிக்குது.. சும்மா இருக்க முடியல.. விஜய்சேதுபதியுடன் லோகேஷ் நெகிழ்ச்சி பேச்சு!

சென்னை: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொகுப்பாளர் லோகேஷின் மருத்துவ செலவுகளை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளார்.

Recommended Video

ரொம்ப பேசுனா வலிக்குது.. சும்மா இருக்க முடியல.. விஜய்சேதுபதியுடன் லோகேஷ் நெகிழ்ச்சி பேச்சு!

மேலும், மருத்துவமனையில், லோகேஷுடன் விஜய்சேதுபதி உரையாடும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நானும் ரெளடி தான் படத்தில், டெரர் பீஸாக லுக் விட்டு, காமெடி செய்திருப்பார் தொகுப்பாளர் லோகேஷ் பாபு.

பயமா இருக்கு

பயமா இருக்கு

நானும் ரெளடி தான் படத்தில், நடிகை நயன்தாராவை, ஆனந்த் ராஜ் கடத்தி வைத்திருப்பார். அந்த காட்சியில், பணத்தை கொண்டு வந்து கொட்டும் விஜய்சேதுபதி, நடிகர் லோகேஷை பார்த்து, அவரை பார்த்து தான் பயமா இருக்கு என சொல்ல, அவர் அசைவின்றி இருப்பவர், வேணும்னா அடிச்சு பாரு எனக் கூறுவார். அந்த காமெடி காட்சி இன்னமும் ரசிகர்கள் சிரிக்க வைத்து வருகிறது.

கை, கால் செயலிழந்தது

கை, கால் செயலிழந்தது

ஆதித்யா டிவி நகைச்சுவை சேனலில், தொகுப்பாளராக கலக்கி வந்தவர் லோகேஷ் பாபு. சமீபத்தில், ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக அவரது இடது கால் மற்றும் இடது கை செயலிழந்து போய் விட்டது. தனது நகைச்சுவை திறமையால் பலரையும் சிரிக்க வைத்து வந்த லோகேஷ், தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நான் தருகிறேன்

நான் தருகிறேன்

நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளரான லோகேஷ் பாபுவை மருத்துவமனையில் சேர்த்துள்ள அவரது நண்பர்கள், அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர். இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று, லோகேஷை பார்த்து, உன்னோட மருத்துவ செலவுக்கான பணத்தை நான் தருகிறேன் எனக் கூறியுள்ளார்;

 வலிக்குது

வலிக்குது

நகைச்சுவை நடிகர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு மூலதனமே வாய் தான். தற்போது, ஸ்டோக் ஏற்பட்டு முடங்கி போயிருக்கும் நடிகர் லோகேஷ் பாபு, விஜய்சேதுபதியுடன் உரையாடும் போதும், ரொம்ப பேசுனா வலிக்குது. அதிகமா யோசிக்க முடியல.. என பேசியுள்ள வீடியோவை பார்க்கும் மனிதர்களுக்கு நிச்சயம் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X