BB8 Tamil: பிக்பாஸில் களமிறங்கும் மறைந்த நடிகரின் மகன்! அந்த மனுசனுக்காகவே ஆதரிப்பாங்கனு பேச்சு
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டீவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், வரும் அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து பிக்பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யார் யார் இந்த சீசனில் போட்டியாளர்கள் என்ற தகவல் வெளியாகிக் கொண்டு உள்ளது.
இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டீவியும் பிக் பாஸ் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே உலகநாயகன் கமல் ஹாசன் தான் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக கூறினார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது.

பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டீவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்குமே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை அவருக்கு அடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார் என அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ப்ரோமோ ரிலீஸ்:அதேபோல் பிக் பாஸ் சீசன் 8இன் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் ப்ரோமோ தமிழ் நாட்டில் உள்ள 10 முக்கியமான நகரங்களில் வெளியிடப்பட்டது. அதாவது, சென்னையில் உள்ள பெசண்ட் நகர் பீச், விருதுநகரில் உள்ள அப்சரா திரையரங்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்ச குப்பம் பகுதியில் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், கோவையில் உள்ள பிரமாண்டமான மைதானமான கொடீசியா மைதானத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் பெரிய திரையில் ப்ரோமோ வெளியிடப்பட்டது.

பொதுமக்கள் அறிவுரை: சேலத்தில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும், திருநெல்வேலியில் உள்ள பெல் பள்ளி வளாகத்திலும், திருச்சியில் உள்ள ப்ரீஷ் ஹோட்டலிலும், வேலூரில் பழைய பேருந்து நிலையத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், மதுரையில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஈரோட்டில் வெள்ளாளர் மகளிர் கல்லூரியிலும், ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த ப்ரோமோவில் சீசன் 8இன் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் அறிவுரை கூறும் விதமாக ப்ரோமோ உருவாக்கப்பட்டது.
சுனிதா: இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8இல் யார் யார் போட்டியாளர்கள் எனத் தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக இணையத்தில் இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் உலா வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியளர்களில் ஒருவராக சுனிதா இருப்பார் என்ற தகவல் வெளியானது. இவர் விஜய் டீவியில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகின்றார். குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மூலம் இவர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். அதேபோல் குக் வித் கோமாளியில் கோமாளியாகவும் வந்து மக்கள் மத்தியில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக்கியுள்ளார்.

மயில்சாமி மகன்: இந்நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில் சாமி இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்பு மயில்சாமி, சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் மயில்சாமிக்காகவே இவருக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற பேச்சு இப்போதே தொடங்கிவிட்டது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பான தகவல் விஜய் டிவி தரப்பில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. மேலும் போட்டியில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் யார் யார் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது ஒவ்வொருவராக தொகுபாளார் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைப்பார்.


Click it and Unblock the Notifications











