Vijay Sethupathi: நயன்தாரா திருமணத்தில் விஜய் சேதுபதி பண்ண வேலையை பாருங்க... ஓக்கே சொன்ன ஷாருக்கான்

சென்னை: ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

முன்னதாக இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்‌ஷனும் இன்னும் முடியவில்லை என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 Vijay Sethupathi: How Vijay Sethupathi got the villain role in Shah Rukh Khans Jawan film

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதி அட்ராசிட்டி
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். இந்தியில் ஷாருக்கான் நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், அடுத்து ஜவான் திரைப்படமும் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீயை ஷாருக்கான் தான் பாலிவுட் அழைத்துச் சென்றார். ஷாருக்கானின் சொந்த தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான் படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் மாதம் டைட்டில் டீசருடன் வெளியானது. ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது, பதான் ரிலீஸ் போன்றவற்றால் ஜவான் படப்பிடிப்பு தாமதமானது.

ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக உருவாகும் ஜவானில் பாலிவுட் நடிகர் தான் வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக விஜய் சேதுபதி தான் வில்லன் என ஜவான் படக்குழு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

 Vijay Sethupathi: How Vijay Sethupathi got the villain role in Shah Rukh Khans Jawan film

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கமிட் ஆனது எப்படி என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் நயன் - விக்கி திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது தான் உங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஆசையாக உள்ளதாக ஷாருக்கானிடம் ஜாலியாக கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

அதன்பின்னர் தான் இயக்குநர் அட்லீயிடம் பேசி விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்தார் ஷாருக்கான். அதேநேரம் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை தனது படத்திலும் நடிக்க வைக்க வேண்டும் என ஷாருக்கான் நினைத்திருந்தாராம். மேலும், நயன் திருமணத்திற்கு முன்பே விஜய் சேதுபதிக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுத்து புக் செய்துவிட்டாராம் ஷாருக்கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X