twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவை கட்டிப்பிடித்த விஜய் சேதுபதி: எல்லாம் இந்த 'குண்டக்க மண்டக்க' செஞ்ச வேலை

    By Siva
    |

    Recommended Video

    100 நாட்களை கடத்தது 96- வீடியோ

    சென்னை: 96 படத்தின் 100வது நாள் விழாவில் விஜய் சேதுபதி த்ரிஷாவை கட்டிப்பிடித்தது தான் ஹாட் டாபிக்.

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். தெலுங்கிலும் படத்தை பிரேம் குமார் தான் இயக்குகிறார்.

    இந்நிலையில் படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

    96

    96

    96 படத்தின் 100வது நாள் விழாவை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தானே. நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் அழகாய், சுவாரஸ்யமாய் தொகுத்து வழங்கினார்.

     விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    96 படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் கட்டிப்பிடிக்க மாட்டார்களா என்று அனைவரும் ஏங்கினர். அதை மேடையில் தெரிவித்த பார்த்திபன் படத்தில் தான் நடக்கவில்லை இந்த மேடையிலாவது த்ரிஷாவை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

    மேடை

    பார்த்திபன் அழைத்ததை அடுத்து மேடைக்கு வந்த விஜய் சேதுபதி த்ரிஷாவை கட்டிப்பிடித்தார். ரசிகர்கள், நடிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் விஜய் சேதுபதி. ஆனால் நடிகைகளை தொட மாட்டார். இந்நிலையில் தான் பார்த்திபனால் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.

     அதிசயம்

    அதிசயம்

    மேடையில் விஜய் சேதுபதி, த்ரிஷாவை கட்டிப்புடுச்சுட்டாராம்யா என்று தான் அனைவரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்திபன் ஒரேயொரு மாத்தியோசி ஐடியாவால் 96 விழா ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay Sethupathi hugged Trisha at the 100th day celebration of the movie 96 and that became the talk of the town.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X