Leo Update - லியோ படத்தில் விஜய் சேதுபதி கன்ஃபார்ம்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் பங்கு இருக்கும் என்று லேட்டஸ்ட்டாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடக்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Vijay Sethupathi in Leo Movie.. here is the latest update

லியோ ஷூட்டிங்: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

பாட்ஷா ஃபார்முலாதான் கதையா?: இதற்கிடையே லியோ படத்தின் கதை குறித்த தகவல் வெளியானது. அதன்படி, ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் வாழ்வார் எனவும், அவருக்கு நண்பராக இருந்து பின்னர் துரோகியாக அர்ஜுன் மாறுவார். அதை மையப்படுத்திதான் கதைதான் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து பாட்ஷா ஃபார்முலாதான் லியோ கதை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Vijay Sethupathi in Leo Movie.. here is the latest update

விஜய் சேதுபதி இருக்கிறாரா?: அதேபோல், படத்தின் வசனகர்த்தா இயக்குநர் ரத்னகுமார் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எனவே, எல்சியூவில் லியோ கனெக்ட் ஆகும் எனவும், அதில் விஜய் சேதுபதி நடிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அது வெறும் புரளி என பின்னர் தெரியவந்தது.

விஜய் சேதுபதி கன்ஃபார்ம்?: இந்நிலையில் லியோ படத்தில் விஜய் சேதுபதி இருப்பது உறுதி என தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், படத்தில் விஜய் சேதுபதி தோன்றமாட்டாராம். அதேசமயம் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, லியோ படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை கூடுதல் உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய் இரட்டை வேடங்களில் நடித்தால் அந்தப் படம் ஓடாது என்ற செண்ட்டிமெண்ட்டை லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் உடைப்பார் என தளபதி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X