சித்தராமையா பயோபிக்கில் விஜய்சேதுபதி.. கர்நாடக தேர்தலுக்கு முன்பாக போடப்பட்ட மாஸ்டர் பிளான்?

பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு பயோபிக் படங்களாக சினிமாவில் வெளிவந்ததெல்லாம் ஓல்டு ஸ்டைல்.

சமீப காலமாக தோனி, சச்சின், சாய்னா நேவால் என ஏகப்பட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி வரும் நிலையில், கர்நாடவின் முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக உள்ளது.

வரலாறு முக்கியம் அமைச்சரே

வரலாறு முக்கியம் அமைச்சரே

மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பயோபிக் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட அரசியல் தலைவர்கள் படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது 75வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், தனது பயோபிக் படத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம சப்ஜெக்ட்

செம சப்ஜெக்ட்

மைசூரு மாவட்டம் வருணா அருகே உள்ள சித்தராமய்யனஹுண்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை ஆசிரியர் ஒருவர் நேரடியாக 5-ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார். அப்படி தனது கல்வி பயணத்தை தொடங்கிய சித்தராமையா படிப்படியாக உயர்ந்து சட்டம் பயின்றார். வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் சமூக நீதிக்கட்சியில் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உயர்ந்தார். மந்திரியாகவும் பணியாற்றினார். பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக ஆட்சி புரிந்தவர் சித்தராமையா. இளமை காலத்தில் தாடியுடன் தரமான லுக்கில் இருந்த சித்தராமையா ஏகப்பட்ட புரட்சிகளையும் செய்துள்ள நிலையில், அவரது கதையை படமெடுத்தால் சிறப்பாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி தான் சரி

விஜய்சேதுபதி தான் சரி

சித்தராமையா கதாபாத்திரத்தில் கச்சிதமாக விஜய்சேதுபதி பொருந்தி நடிப்பார் என சித்தராமையாவின் கட்சியில் இருக்கும் தங்கதாகி எம்.எல்.ஏ இந்த ஏற்பாட்டை செய்து வருகிறார். சத்யரத்னம் எனும் இளம் இயக்குநர் இந்த படத்தை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சித்தராமையா பதில்

சித்தராமையா பதில்

இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில், பதிலளித்த கர்நாடகாவின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, என் பயோபிக்கில் நான் நடிக்கப் போவதில்லை. எனக்கு நடிக்கவும் தெரியாது. கட்சியில் உள்ள சிலர் விருப்பப்படுகின்றனர். எல்லாம் எப்படி சரியா வருகிறதா என்று பார்ப்போம் என பதில் அளித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த படத்தை தயார் செய்த சித்தராமையா தரப்பு தீவிரம் காட்டி வருவதாகவும் விஜய்சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X