அந்த ஹீரோ லாரி டிரைவர், விஜய்சேதுபதி வன அதிகாரி...காட்டுக்குள் நடக்கும் ஆக்ஷன் அட்வெஞ்சராமே!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தனது அடுத்தப் படத்தில் வன அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, சிறந்த கதை என்றால் எந்த கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
இந்தியில் ஆமிர்கானின் லால்சிங் சத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடல் உடையை குறைத்து நடிக்க இருக்கிறார்.

உப்பெனா
தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு வருகிறது. அங்கு சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் கேரக்டருக்கு அங்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சில படங்களில் அங்கு அவர் நடித்து வருகிறார். இப்போது 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நடிகரின் எளிமை
இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இதை புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோ. கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதியின் சிம்பிளிசிட்டியை தெலுங்கு திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். விஜய் சேதுபதி தமிழில் பெரிய நடிகராக இருந்தாலும், எளிமையாக நடந்துகொள்வதாகக் கூறி வருகின்றனர்.

விஜய் சேதுபதி சம்பளம்
இதை அடுத்து, அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ அல்லு அர்ஜுன் லாரி டிரைவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் வன அதிகாரியாக நடிக்கிறார்.
Recommended Video

அதிக எதிர்பார்ப்பு
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, கன்னட நடிகர் ராஜ்தீபக் ஷெட்டி ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். சுகுமார் இயக்குகிறார். ரங்கஸ்தலம் என்ற சூப்பர் ஹிட் படத்துக்கு பிறகு சுகுமார் இயக்கும் படம் இது என்பதாலும் அலா வைகுந்தபுரம்லோ படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











