Vijay Sethupathi: முதல்வர் பயோபிக்... விஜய் சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்... கன்னடத்தில் மாஸ் என்ட்ரி
சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் முதன்முறையாக கன்னட திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளாராம் விஜய் சேதுபதி.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
முதலமைச்சர் பயோபிக்கில் விஜய் சேதுபதி: தமிழில் ஹீரோ, வில்லன் என வெரைட்டியாக நடிக்கும் விஜய் சேதுபதி, மற்ற மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் உப்பென்னா, சைரா நரசிம்ம ரெட்டி படங்கள் விஜய் சேதுபதிக்கு நல்ல அறிமுகம் கொடுத்தன. அதேபோல், இந்தியில் ஃபார்ஸி வெப் சீரிஸ் விஜய் சேதுபதிக்கு நல்ல ரீச் கொடுத்தது.
இதனால் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான், கத்ரினா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளதால், பாலிவுட்டில் விஜய் சேதுபதியின் கேரியர் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது கன்னடத்திலும் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டார் விஜய் சேதுபதி.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இதுகுறித்து கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 'லீடர் ராமையா' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, சத்ய ரத்னம் இயக்கவுள்ளாராம். மக்களால் உருவாக்கப்பட்ட அரசன் என்ற டேக் லைனுடன் 'லீடர் ராமையா' படம் வெளியாகுமாம்.

சித்தராமையாவின் சிறு வயது சம்பவங்கள், கல்லூரி நாட்கள், வழக்கறிஞராக இருந்தபோது என மூன்று காலக்கட்டங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. இதில் வழக்கறிஞர் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், அதற்காக அவர் கால்ஷீட்டும் கொடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கன்னடத்தில் செம்ம மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
சித்தராமையாவின் பயோபிக்காக உருவாகும் 'லீடர் ராமையா ஷூட்டிங் இந்த மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட இயக்குநர், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளாரம்.


Click it and Unblock the Notifications











