twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டடா: விஜய் சேதுபதியை பார்த்து சொன்ன த்ரிஷா

    By Siva
    |

    Recommended Video

    விஜய் சேதுபதி, திரிஷா மரண மாஸ்- வீடியோ

    சென்னை: நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டடா என்று த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து தெரிவித்துள்ளார்.

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 96 படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் ஒரு முக்கிய காட்சியை வெளியிட்டுள்ளனர்.

    விஜய் சேதுபதி

    டேய், நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டடா. ஏன், உன்கிட்ட யாருமே சொன்னது இல்லையா என்று த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்தவர்கள் செம, க்யூட், சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாட்டுக்கட்ட

    நாட்டுக்கட்ட

    இனிமேல் யாரும் விஜய் சேதுபதியை சுமார் மூஞ்சி குமாரு என்று அழைக்கக் கூடாது. இன்றில் இருந்து அவர் ஆம்பள நாட்டுக்கட்ட என்று அன்போடு அழைக்கப்படுவார். ஆனால் இந்த வசனம் எழுதியவரை பாராட்டியே ஆக வேண்டும். ஆம்பள நாட்டுக்கட்ட?. அது சரி ஆம்பளங்க மட்டும் தான் பெண்களை பார்த்து நாட்டுக்கட்ட என்று சொல்லணுமா?. பதிலுக்கு அவுகளும் சொல்வாங்க.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    96 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை பார்த்து பயமாக இருப்பதாக விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவை பார்த்த பிறகு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி பயப்படுவதில் தவறு இல்லை. அதிக எதிர்பார்ப்புடன் சென்று அது நிறைவேறாவிட்டால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர்கள்

    பயம் ஒரு பக்கம் இருக்க, ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த 96 படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார் விஜய் சேதுபதி. அவர் நம்பிக்கை வீண் போகாது என்று நாமும் நம்புவோமாக. இந்நிலையில் 96 பள்ளி குரூப் போட்டோ சவாலின் ஒரு பகுதியாக தனது 10ம் வகுப்பு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் த்ரிஷா, விக்னேஷ் சிவன், ரமேஷ் திலக், விக்ராந்த் ஆகியோருக்கு சவால் விட்டுள்ளார் அவர்.
    #96SchoolGroupPicChallenge 😍

    English summary
    A cute video of Trisha and Vijay Sethupathi has been released a day ahead of 96 movie release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X