ஹீரோவை தேடிவரும் வில்லன் வாய்ப்புகள்... சம்பளம் இத்தனை கோடி என்றால் கால்ஷீட் கன்ஃபார்ம்
சென்னை: கோலிவுட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்த விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ஃபார்ஸி வெப் சீரிஸ் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டிலும் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என வரிசை கட்டி நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு வில்லன் கேரக்டரில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறதாம்.
விஜய் சேதுபதியும் கிடைத்த வாய்ப்புகளில் ஸ்கோர் செய்து வருவதுடன் தற்போது அவரது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்திவிட்டாராம்.

பான் இந்தியா ஸ்டார் விஜய் சேதுபதி
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டில் மாஸ் காட்டியவர் விஜய் சேதுபதி. முன்னதாக பல வருடங்கள் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டே இருக்கிறார். முதன்முறையாக இந்தியில் ஃபார்ஸி என்ற வெப் சீரிஸில் நடித்து தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துவிட்டார்.

வில்லன் கேரக்டருக்கு தேடிவரும் வாய்ப்புகள்
ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் புகழ் ராஜ் & டிகே இயக்கியுள்ள ஃபார்ஸி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், ஷாகித் கபூர், ரெஜினா, சாக்ஷி கண்ணா உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளனர். ஹீரோ, வில்லன், காமெடி ரோல் என வெரைட்டியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரமில் கமலுக்கு வில்லனாகவும் நடித்து சம்பவம் செய்திருந்தார். இதனால் அவருக்கு வில்லன் கேரக்டர்கள் அதிகளவில் தேடி வருகிறதாம்.

ஜவான் வில்லன் கேரக்டருக்கு வாங்கிய சம்பளம்
இந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதேபோல், கத்ரின கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், மாநகரம் இந்தி ரீமேக்கான மும்பைக்கார் படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்க 10 முதல் 15 கோடிகள் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க 28 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேட்டதை கொடுத்தால் வில்லன் கால்ஷீட்
ஜவான் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க வேண்டும் என ஷாருக்கானே விரும்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்தப் படத்தை அவரே சொந்தமாக தயாரிப்பதால், விஜய் சேதுபதிக்கு சம்பளத்தை வாரிவழங்கியுள்ளார். இதனால் ருசி கண்ட பூனையாக விஜய் சேதுபதியும் தனது சம்பளத்தை இருமடங்கு உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி, இனிமேல் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் 50 கோடி வரை சம்பளம் வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளாராம். அப்படி இருந்தும் அவருக்கான வாய்ப்புகள் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

விரைவில் கன்னடத்தில் அறிமுகம்
இதனிடையே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் மட்டும் நடித்துவந்த விஜய் சேதுபதி, முதன்முறையாக கன்னடத்திலும் அறிமுகமாகவுள்ளாராம். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் தற்போது கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் வில்லனாக அறிமுகமான விஜய் சேதுபதி, இப்போது கன்னடத்திலும் வில்லனாக என்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











