வாத்தி கம்பேக்... விஜய் சேதுபதியின் வேற லெவல் ரீ-என்ட்ரி... மிஷ்கின் அல்போன்ஸ் புத்திரன் வெயிட்டிங்!

சென்னை: கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தி கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

விஜய் சேதுபதியின் தரமான கம்பேக்கை பார்த்த இரண்டு இயக்குநர்கள் அவருடன் அதிரடியாக கூட்டணி வைத்துள்ளனர்.

அதன்படி, விஜய் சேதுபதி அடுத்து மிஷ்கின், அல்போன்ஸ் புத்திரன் ஆகியோரது படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Vijay Sethupathi is committed to Mysskin and Alphonse Puthren films

வாத்தி கம்பேக்
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் பெருமாள் வாத்தியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். முதல் பாகத்தில் இவருக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் இன்னும் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி லைன் அப்
இந்த மாஸ்ஸான கம்பேக்கை பார்த்த இயக்குநர்கள் மிஷ்கின், அல்போன்ஸ் புத்திரன் இருவரும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்து மணிகண்டன் இயக்கும் தமிழ் வெப் சீரிஸ்ஸில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விடுதலை ஹிட்டால் இப்போதே விஜய் சேதுபதியின் படம் குறித்த அறிவிப்பை வெளியிட மிஷ்கின் முடிவெடுத்துள்ளாராம்.

 Vijay Sethupathi is committed to Mysskin and Alphonse Puthren films

கலைப்புலி எஸ் தாணு
பிசாசு 2 படத்தில் மிஷ்கினுக்காக கேமியோ ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அப்போது ஏற்பட்ட நட்பு தான், இருவரும் தனியாக ஒரு படத்தில் இணையும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளதாம். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயரிக்கவுள்ளார். விஜய் சேதுபதி, மிஷ்கின், கலைப்புலி எஸ் தாணு கூட்டணி குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அது தற்போது உறுதியாகவுள்ளதாகவும், இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் மே மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

மீண்டும் லவ்வர் பாய்
இன்னொரு பக்கம் டைம், பிரேமம் படங்கள் மூலம் பிரபலமான அல்போன்ஸ் புத்திரன் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளாராம். கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்டு திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஃபஹத் பாசில், நயன் நடிப்பில் 'பாட்டு' என்ற படத்தை இயக்கவிருந்தார் அல்போன்ஸ் புத்திரன். ஆனால், தற்போது விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளாராம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி லவ்வர் பாய் கேரக்டர் எனவும், இது ரொமாண்டிக்காக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 Vijay Sethupathi is committed to Mysskin and Alphonse Puthren films
விடுதலை பார்ட் 2
இதனிடையே இந்தாண்டு இறுதிக்குள் விடுதலை படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் போர்ஷன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளதாக விடுதலை படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். முதல் பாகத்தின் முடிவிலும் அதற்கான லீட் இருந்ததால், தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X