விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. பொன்ராமுடன் இணைகிறார்

சென்னை : வருடத்திற்கு சுமார் ஆறு முதல் ஏழு படங்கள் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த வருடத்தில் இவரால் ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு இறுதி வரை வரிசையாக படங்களை கமிட்டாகி உள்ளார் சேதுபதி. அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன் தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துணை நடிகராக தனது திரை பயணத்தை ஆரம்பித்து இவர் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்.

Vijay Sethupathi is getting ready for the next film

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அடுத்து வெளிவந்த சூது கவ்வும் படம் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படமாக இருந்தது. அடுத்து நகைச்சுவை படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹேப்பி என்று சொல்லியே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

2016 - 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு சிறப்பான ஆண்டு என்று சொல்லலாம் அந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்த சேதுபதி படம் ஹிட்டாகி அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும பேசப்பட்டது.

தன்னால் காமெடியிலும் ஜோலிக்க முடியும் என்பதை நானும் ரவுனும் தான்படத்தில் நிரூபித்து இருப்பார் விஜய் சேதுபதி. தர்மதுரை, கவண், புரியாத புதிர், றெக்கா, கருப்பன், செக்கசிவந்த வானம், 96 என்று தொடர்ந்து அவரின் படங்கள் ஹிட் அடித்துக்கொண்டே இருந்தன.

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தந்த படம் விக்ரம் வேதா இந்த படத்தில் இவர் ஒரு டாணாக நடித்து இருப்பார். படத்திற்கு படம் ஏதோ ஒரு வித்தியாசத்தை செய்து வருகிறார். இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல மதிப்பும் பாசமும் உண்டு.

ஆனால் கடந்த ஆண்டில் இவரால் பெரிய ஹிட் கொடுக்க முடிய வில்லை வித்தியாசமான கதைகளை கையில் எடுத்தும் அந்த படங்கள் தோல்வியில் முடிந்தன. இவர் தற்போது மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, விஜய் சேதுபதி. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனர் பொன் ராம் உடன் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. பொன் ராம் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தபடாத வாலிபர் சங்கம் மற்றும் சீமராஜா படத்தை இயக்கியவர். இவர் எடுத்த வருத்தபடாத வாலிபர் சங்கம் படம் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

Vijay Sethupathi is getting ready for the next film

இவர் தற்போது சத்யராஜ் மற்றும் சசிக்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்ததும் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆக மொத்தத்தில் விஜய் சேதுபதி இந்த ஆண்டு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X