“விஜய் சேதுபதி ஒரு ‘ஆம்பளை’ அமிர்தானந்தமயி”... பார்த்திபன் ஏன் இப்படிச் சொல்றார் தெரியுமா?
96 பட 100வது நாள் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விஜய் சேதுபதி, திரிஷாவைப் பாராட்டி பேசினார் நடிகர் பார்த்திபன்.
Recommended Video

சென்னை: ரசிகர்களைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஒரு அமிர்தானந்தமயி என்ன பண்ணுவாங்களோ அது மாதிரி ஆம்பளை அமிர்தானந்தமயியா விஜய் சேதுபதி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் 100வது நாள் வெற்றிவிழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.
விஜய் சேதுபதி ரசிகர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதைத் தன் பாணியில் அவர் விமர்சித்தார். இது தொடர்பாக மேலும் அவ்விழாவில் அவர் பேசியதாவது,

காதல் மட்டும் போதும்:
காதலிக்கிறதுக்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். 'யமுனை ஆற்றிலே' பாடலோட ஒரிஜினல் வெர்ஷனைவிட இந்தப் படத்துல அந்தப் பாட்டு எப்போ வரும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு இயக்குநருடைய காலை தொட்டு கும்பிடணும்னு நினைச்சேன். இந்தப் படத்துல இருக்கிற ஃப்ரேம் எல்லாமே பிரேம்தான் இருக்கார்.

ஆம்பள அமிர்தானந்தமயி:
எத்தனையோ நடிகர்கள் இருந்திருக்காங்க. மக்கள்கிட்ட பேசும்போது அப்படி ஒரு ஈர்ப்பு. அவங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஒரு அமிர்தானந்தமயி என்ன பண்ணுவாங்களோ அது மாதிரி ஆம்பளை அமிர்தானந்தமயியா இருக்கார், விஜய் சேதுபதி.

பெண் ரசிகைகள்:
தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்காங்க. அவருக்குப் பிறகு, பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருக்கு. அதுதான் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. ஆனா, இந்தப் படத்துக்கு திரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.

நயன்:
அவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. நான் முதன்முறையா திரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன். மாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதுல தப்பிச்சவங்கதான் திரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு" என்றார்.

புதுச்சட்டை:
மேலும், இளையராஜா 75 கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்துப் பேசிய அவர், "பொதுவாக ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆசைப்படுறது ஒரு இடம்; வாழ்க்கைப்படுறது வேற ஒரு இடமா இருக்கும். அது மாதிரி இந்த இளையராஜா சார் விழாவுல போட்டுக்கிறதுக்காக ஒரு மாசம் முன்னாடியே இந்த சட்டையை மியூசிக்கல் சிம்பள் எல்லாம் வெச்சு காதலோடு ரெடி பண்ணது. ஆனா, ஒரு சில காரணங்களால நான் அங்கே போகலை. அந்த சட்டையோடு இங்கே வந்திருக்கேன்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











