Bigg Boss 8 Promo: கமல் மாதிரி பேசல.. ஒரே ஒரு ஸ்மைல்.. புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் இனி இவர்தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என்றும் சினிமாவில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகக் கூறி ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நகர்ந்து விட்டார்.
கமல்ஹாசன் அளவுக்கு கெத்தாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கம்பீரமாக அடுத்து நடத்தப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தான் சரியான நபர் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால், பிரம்மாண்ட பொருட்செலவில் சிம்பு நடித்து வரும் நிலையில், அவர் நோ சொல்லி விட்டார். அதன் பின்னர், வலை வீசி தேடியதில் கடைசியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்துள்ளார். அவர் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியுள்ள அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது.
குட்பை சொன்ன கமல்: இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் கல்கி 2898 ஏடி மற்றும் இந்தியன் 2 படங்கள் வெளியாகின. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் கமல்ஹாசன் படிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கல்கி 2 மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் படம் என ஏகப்பட்ட கமிட்மெண்ட் இருப்பதால் பிக் பாஸ் தொகுப்பாளராக இனிமேல் வரப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்து விட்டார்.
விஜய்சேதுபதி தான் ஹோஸ்ட்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கான புதிய லோகோவுடன் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஏகப்பட்ட கோட் சூட்களை இனிமேல் மாட்டிக் கொண்டு விஜய் சேதுபதி மாஸ் காட்டப்போகிறார் என்பதை அறிவிக்கும் விதமாகவே இந்த ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.
கமல் மாதிரி பேசல: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஐ வில் பி வாட்சிங் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசிய வசனங்கள் வேறலெவலில் மக்கள் மத்தியில் டிரெண்டானது. இந்நிலையில், கமல் மாதிரி பேசாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சின்ன ஸ்மைல் மட்டும் பண்ணி விட்டு சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன் என்பதை இந்த ப்ரோமோவில் சொல்லியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











