விடுதலை 2 தாமதம்.. விஜய்சேதுபதி தான் காரணம்.. டென்ஷனில் வெற்றிமாறன்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சச்கைபோடு போட்ட திரைப்படம் விடுதலை. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில், படம் உரிய நேரத்தில் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி இந்த படத்தின் மூலம் அவரின் மற்றுமொரு பரிமானத்தை பார்க்க முடிந்தது. இவர் நகைச்சுவை நடிகராக நடித்த போது இருந்த ரசிகர்களை விட, ஹீரோவாக நடித்த இவருக்கு அதிகமாக ரசிகர்கள் கிடைத்தனர். அதிலும், இப்படத்திற்காக கடுமையா உடல் பயிற்சி செய்து, கட்டுமஸ்தாக நடிகர் போல மாறி அனைவரையும் அலறிவிட்டார். அதுவும் கான்ஸ்டபில் குமரேசனாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

வசூலை அள்ளிய திரைப்படம்: விடுதலை முதல் பாகத்தில், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடத்திருந்தனர். இப்படம்,கடந்த ஆண்டின் மார்ச் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தில் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன, வாத்தியாராக இருந்த அவர் ஏன் போராளியாக மாறினார் என்பதை இரண்டாம் விவரிக்க இருக்கிறார்.
விடுதலை 2: விடுதலை பாகம் 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள், அதன் முதல் நாள் படப்பிடிப்பின் போதே முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருந்த. இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலை பாகம் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை, தமிழகத்தின் மலைப்பாங்கான இடங்களில் படமாக்கப்பட்டன.
டென்ஷனில் வெற்றி மாறன்: இப்படத்தில் சூரியின் காட்சிகள் மொத்தமும் முடிந்துவிட்டதாகவும், விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளரின் நெருக்கடி காரணமாக ஏப்ரல் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் வெற்றிமாறன் இருக்கிறார். இதற்காக விஜய் சேதுபதியிடம் மொத்தமாக கால்ஷீட் கேட்டதாகவும் ஆனால் அவ்வளவு நாட்கள் மொத்தமாக தன்னால் தர முடியாது என்று விஜய் சேதுபதி கூறிவிட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனால் விடுதலை 2 படம் வெளியாவதில் மேலும் தாமதமாகும் என்பதால், வெற்றிமாறன் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











