ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்துவார்கள் என தெரிந்தும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி

By Siva

Recommended Video

Actor Vijay Sethupathi: தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம்- வீடியோ

ஹைதராபாத்: தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

கோலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி தான். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிப்பது இல்லை. இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடிக்கிறார்.

Vijay Sethupathi is Vaishnav Tejs villain

இந்நிலையில் அவர் சயீரா நரசிம்ம ரெட்டி படம் மூலம் டோலிவுட் சென்றார். தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகனும், நடிகர் சாய் தரம் தேஜின் தம்பியுமான வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகிறார். அவர் நடிகராக அறிமுகமாகும் படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார். வைஷ்ணவுக்கு ஜோடியாக மனிஷா நடிக்கிறார்.

அந்த படத்தில் வைஷ்ணுவுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பேட்ட படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது வைஷ்ணவுக்கு வில்லனாகியுள்ளார்.

காதல் படத்தில் வில்லன் என்பதால் என்ன சேட்டை எல்லாம் செய்யப் போகிறாரோ?. காதலை பிரிக்கும் வில்லனை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்துவார்கள் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X