Vijay Sethupathi: விஜய் சேதுபதி - மிஷ்கின் பட டைட்டில் இதுதானா..? வில்லனாக களமிறங்கும் 90S ஹீரோ!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலம்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் மாஸ் காட்டி வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் உடன் விஜய் சேதுபதி கூட்டணி வைக்கவுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் வில்லனாக நடிக்கவுள்ள 90ஸ் ஹீரோ குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

 Vijay Sethupathi: Jayaram is playing the villain in Vijay Sethupathi - Mysskin film Train

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் 90ஸ் ஹீரோ: விஜய் சேதுபதி தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் மஹாராஜா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து மேலும் சில படங்களில் கமிட்டாகவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணி கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

மேலும், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் ரயிலில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதனால், இந்தப் படத்திற்கு ட்ரெய்ன் (Train) என டைட்டில் வைக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளாராம். அதோடு மிஷ்கினே இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் படத்தின் வில்லன் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரபலமான மலையாள ஹீரோ ஜெயராம் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. 90களில் தமிழ், மலையாளம் மொழிகளில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் ஜெயராம். சமீபத்தில் கூட மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களில் ஆழ்வார்கடியான் கேரக்டரில் நடித்திருந்தார். ஹீரோ, காமெடி என வெரைட்டியாக நடித்துள்ள ஜெயராம், மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இதனால், விஜய் சேதுபதி - ஜெயராம் - மிஷ்கின் என வித்தியாசமான காம்போவில் உருவாகும் இந்தப் படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் நவம்பர் இறுதியில் தொடங்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு முதல் மூன்று ஷெட்யூல்களில் முடிவுக்கு வரும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X