விஜய் சேதுபதியின் ரேடியோ மாதவ்...ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு
ஐதராபாத் : மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஜெயராம் சேர்ந்து நடித்த மார்க்கோணி மதாய் படம், தெலுங்கில் ரேடியோ மாதவ் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தயாரிப்பாளர் டிவி கிருஷ்ணசாமியின் லட்சுமி சென்னிகேசவா பிலிம்ஸ் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது.
இதற்கு முன் துல்கர் சல்மான் - சாய் பல்லவி நடித்த ஹே பில்லகாடா படத்தையும் லட்சுமி சென்னிகேசவா பிலிம்ஸ் தான் தெலுங்கில் வெளியிட்டது. தற்போது ரேடியோ மாதவ் படத்தை ஏப்ரல் 23 ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.

அனைவருக்கும் பிடிக்கும் படம்
இது பற்றி தயாரிப்பாளர் டிவி கிருஷ்ணசாமி கூறுகையில், நல்ல பொழுதுபோக்கு படமான இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ஜெயராம், விஜய் சேதுபதியின் கேரக்டர்கள் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். படக்காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பாடல்களும் அருமையாக அமைந்துள்ளது. ரேடியோ மாதவ் படம் டப்பிங் படம் போன்று இருக்காது என்றார்.

தெலுங்கில் ரிலீசாகும் மலையாள படம்
நிகழ்ச்சியில் ஜெயராம் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், 15 ஆண்டுகளுக்கு முன் நான் தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் படங்களில் கமலஹாசனுடன் நடித்துள்ளேன். சமீபத்தில் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளேன். ஆனால் நான் நடித்த மலையாள படம், தெலுங்கில் ரேடியோ மாதவ் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் அருமையான படம் என்றார்.

கடுமையாக உழைத்தோம்
வயதை தாண்டி அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும் எனவும், இந்த படம் ரசிகர்களை தியேட்டரில் வந்து பார்க்க தூண்டும் என நம்புவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை டப்பிங் படமாக இல்லாமல், நேரடி படம் போன்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்த கடுமையாக உழைத்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பிடிக்கும்
இந்த படத்திற்கு பாஷ்யா ஸ்ரீ என்பவர் வசனம் மற்றும் பாடல் வரிகளை எழுதி உள்ளார். உப்பன்னா படத்திற்கு பிறகு தெலுங்கிலும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் உள்ளதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











