மதுரையில் ரஜினியுடன் மல்லுக்கட்டும் விஜய் சேதுபதி
Recommended Video

சென்னை: மதுரையில் ரஜினியுடன் மல்லுக்கட்டப் போகிறாராம் விஜய் சேதுபதி.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் 40 நாட்கள் நடைபெற்றது. அதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் மதுரையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறாராம். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி இருந்தாலும் விஜய் சேதுபதி தான் முக்கிய வில்லன் என்று கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் மீது இருக்கும் நம்பிக்கையால் கதையை கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி. அனிருத் முதன்முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார்.
மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











