Don't Miss!
- Sports
சொந்த மண்ணில் நடந்தாலும் இந்தியாவுக்கு சிக்கல் தான்.. உலகக்கோப்பை திட்டம்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- News
இதுதான் அமைச்சர் தங்குற ரூமா? கடலூரில் டென்ஷனான எல்.முருகன்.. முதல்வர் வரை சென்ற புகார்! என்னாச்சு?
- Technology
ஹர்திக் பாண்டியாவே இந்த போன்தான் யூஸ் பண்றாரா? இது இன்னும் இந்தியாவுக்கே வரலயேப்பா!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
கத்ரினா கையிப்புடன் மீண்டும் சூட்டிங்... மும்பையில் மக்கள் செல்வன்!
மும்பை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகியுள்ளார். இந்தியில் வெப் தொடர், மற்றும் படத்திலும் நடித்து வருகிறார்.
வரலாற்றை மாற்றி எழுதிய மிதாலி... டாப்சி மிரட்டலான நடிப்பில் சபாஷ் மித்து டீசர் வெளியானது!

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கடைசி விவசாயி படம் இவரது நடிப்பில் வெளியானது.

அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி
இதேபோல அடுத்ததாக மாமனிதன் படமும் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இவரது நடிப்பில் விக்ரம் படமும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நிற்க நேரமின்றி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தெலுங்கு மற்றும் இந்தியிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மெர்ரி கிறிஸ்துமஸ் படம்
இந்தியில் இவரது நடிப்பில் வெப் தொடர் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. குறிப்பாக கத்ரினா கையிப்புடன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படமான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நடந்து முடிந்துள்ளது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு
தற்போது மும்பையில் இதன் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர் ஜானி கத்தார், பத்ராபூர், அந்தாதூன் என பல படங்களை இயக்கி பெயர் பெற்றவர். மெர்ரி கிறிஸ்துமஸ் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட வீடு செட்
கிறிஸ்துமசையொட்டி நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருகிறது. படத்திற்கென வீடு ஒன்றின் செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக பாத்ரூம் செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏப்ரலில் இந்த இரண்டாவது ஷெட்யூல் நிறைவடையும் என்று படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தவுரானி தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ரிலீஸ்
இதையடுத்து மே, ஜூன் மாதங்களில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமசையொட்டி ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் இந்தியிலும் நாயகனாக நடித்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.