கமலுக்கும் வில்லனாகும் விஜய் சேதுபதி… விக்ரம் பட அப்டேட்!

சென்னை : கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி வில்லாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்கும்

படப்பிடிப்பு தொடங்கும்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் உருவாகி வரும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பின்பு இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்க உள்ளன.

தகவல்கள்

தகவல்கள்

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் லாரன்ஸ் நடிக்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, மலையாள நடிகர் ஃபத் ஃபாசில் தான் வில்லன் என பல தகவல்கள் மாறி மாறி வெளிவந்தன.

வில்லன்

வில்லன்

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லான மிரட்டிய விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லான நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் விஜய்சேதுபதி விக்ரம் படத்தில் வில்லான நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கைவசம்

கைவசம்

விஜய்சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம், புஷ்பா, நவசர, விடுதலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல கமல்ஹாசனும் ஷங்கரின் இந்தியன்2வில் நடித்து வருகிறார். இரண்டு ஜாம்பவான் இணையும் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X