பேட்ட படத்திற்கு பிறகு.. மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதி.. ஜெயிலர் 2வில் வில்லனா?
சென்னை: விஜய் சேதுபதிக்காகத்தான் தற்போது கோலிவுட் சினிமாவே வெயிட் பண்ணிக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஆன்போர்ட் ஆனார்.
இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எந்திரன் படத்துக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது ஜெயிலர் திரைப்படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்திற்கும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
ஹுகும் செய்த மேஜிக்: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு நெல்சனின் டார்க் காமெடி இயக்கம் ஒரு பக்கம் கை கொடுத்தது என்றால், இன்னொரு பக்கம் அனிருத் இசையில் வெளியான காவாலா மற்றும் ஹுகும் பாடல்கள் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஸ்க்ரீனில் எப்படி காட்ட வேண்டும் என்பதையும் மல்டி ஸ்டார்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் நெல்சன் அட்டகாசமாக செய்திருந்தார். அதே ஃபார்முலாவை கையிலெடுத்த ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜால் கூட அதை சரியாக செய்ய முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.
ஜெயிலர் 2வில் விஜய் சேதுபதி: இந்த ஆண்டு ஏஸ், தலைவன் தலைவி படங்களை கொடுத்த விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு மற்றும் ட்ரெயின் படங்கள் வெளியாகாமல் உள்ளன. மேலும், பூரி ஜெக்கன்னாத் படத்தை முடித்த விஜய் சேதுபதி பாலிவுட் ரசிகர்களை தி ஃபேமிலி மேன் 3 வெப்சீரிஸ் மூலம் திருப்திப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி அடுத்ததாக ஜெயிலர் 2 படத்திலும் இணைந்துள்ளார் என்கின்றனர்.
நெகட்டிவ் ரோல்: இந்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில், விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்கிற தகவல் வந்ததுமே பேட்ட படத்தை போல இதிலும் நெகட்டிவ் ரோலில் தான் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், படக்குழு விஜய் சேதுபதி தொடர்பாக எந்தவொரு அப்டேட்டையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











