விஜய் சேதுபதியின் 46வது படத்தை இயக்கப்போவது இவர்தான்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். என்ன கதாப்பாத்திரம் என்றாலும் தன்னுடைய சிறப்பாக செய்து முடித்து விடுகிறார்.
தன்னுடைய தனித்துவமான நடிப்பாலேயே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.

பவானியாக மிரட்டல்
கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் பவானி என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டினார். அதனை தொடர்ந்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குநர் பொன்ராம்
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

போலீஸ் அதிகாரியாக
இந்தப் படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் ஷேர் செய்திருக்கும் வீடியோவின் படி விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தெரிகிறது.

அனுகீர்த்தி ஹீரோயின்?
இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இதனிடையே இந்தப் படத்தில் அனுகீர்த்தி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இணைய உள்ள நட்சத்திரங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











