கத்ரினா கைஃப்புக்கு கொரோனா...நிறுத்தப்பட்ட விஜய் சேதுபதியின் பாலிவுட் படம்
மும்பை : விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தை டைரக்டர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். அவர் தான் மெகாஹிட் படமான அந்ததுன் படத்தையும் இயக்கியவர். மெர்ரி கிறிஸ்மஸ் என பெயரிடப்பட்டுள்ள விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடந்து வந்தது.
ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்கிறார்.

ஏப்ரல் மாத ஆரம்பம் முதல் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், ஏப்ரல் 15 ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கத்ரினா கைஃப்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது என்றார்.
அதே சமயம் மே மாதம் முதல் ராஜ் படத்தின் சூட்டிங்கிலும், டிகே.,வின் வெப் சீரிசிலும் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிசில் ஷாகித் கபூர், ராஷி கன்னா ஆகியோர் நடிக்கிறார். இதனால் கரினா கைஃப் கொரோனாவில் இருந்து குணமடையும் வரை மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால் கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசையாக பல படங்களின் சூட்டிங், தயாரிப்பு என பிஸியாக இருப்பதால் குறிப்பிட்ட நாளில் எந்த படத்தின் சூட்டிங்கில் விஜய் சேதுபதி பங்கேற்பார் என சொல்ல முடியாமல் உள்ளது. இவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. வினேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











