Don't Miss!
- News
வாட்டர் டேங்கில் துர்நாற்றம்.. மேலே ஏறி பார்த்தவர்களுக்கு ‘ஷாக்’.. கடலூர் அருகே பரபரப்பு!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவருக்காக ஓடி வந்த கமல்..மண்டியிட்டு கையில் முத்தமிட்ட விஜய்சேதுபதி.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!
சென்னை : டிஎஸ்பி படவிழாவிற்கு வந்த உலக நாயகன் கமலஹாசனை, விஜய்சேதுபதி மண்டியிட்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் டிஎஸ்.பி. இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடித்துள்ளார்.
பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லயோலா கல்லூரியில் மாணவர்கள் 'தல’ன்னு கத்தியதால் டென்ஷனான விஜய்சேதுபதி.. என்ன ஆச்சு?

விஜய்சேதபதியின் டிஎஸ்பி
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, வெப் சிரீஸ், மௌன படம் என ஏகப்பட்ட படங்களை வைத்து படு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர், வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. இத்திரைப்படம் டிசம்பர் 2ந் தேதி வெளியாக உள்ளது.

மண்டியிட்டு கையில் முத்தம்
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள வந்த உலகநாயகன் கமல்ஹாசனை, நடிகர் விஜய்சேதுபதி மண்டியிட்டு பூங்கொத்து கொடுத்து கையில் முத்தமிட்டமிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

விஜய்சேதுபதிக்காக ஓடி வந்த கமல்
இதையடுத்து விழாவில் பேசிய கமல், என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர். நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன். அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்துள்ளார். நாளை விஜய் சேதுபதி காலில் விழ வேறொரு கலைஞன் வருவான் என விஜய்சேதுபதியை வெகுவாக பாராட்டி பேசினார். உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் விஜய்சேதுபதிக்காக இந்தவிழாவில் கலந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இருமல் பெரிய செய்தியாகி உள்ளது
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காக வந்திருக்கிறேன். டிரைலர் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நான் நலமாகவே இருக்கிறேன். முன்பெல்லாம் பெரிய விபத்து நடந்தாலும், அடுத்த எப்போ படம் ரிலீஸ்? எப்போ ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது இருமல் தான். மிகப்பெரிய செய்தியாக உள்ளது, இதற்கு காரணம் ஊடகம் என்றார்.