விஜய் சேதுபதியின் ஷில்பா கெட்டப் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

By Vignesh Selvaraj

சென்னை : விஜய் சேதுபதியின் புதிய படத்தை 'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். 'சூப்பர் டீலக்ஸ்' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக பி.எஸ்.வினோத், நீரவ்ஷா, படத்தொகுப்பாளராக சத்யராஜ் ஆகியோருடன் படத்தை இயக்கிவருகிறார் தியாகராஜன் குமாரராஜா.

Vijay sethupathi latest photo goes viral

முதலில் இந்தப் படத்திற்கு 'அநீதி கதைகள்' என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் அந்தத் தலைப்பை மாற்றி 'சூப்பர் டீலக்ஸ்' என அறிவித்தார்கள். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பெண் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

பெண் வேடத்தில் இருக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படத்தை படக்குழுவினரே வெளியிட்டு இப்படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் ஷில்பா என்றும் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருக்கும் இந்தப் புகைப்பட்ம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X