அம்மாடியோவ்.. அந்தர் பல்டி அடிக்கும் சன்னி லியோன்.. பிரபுதேவாவின் பேட்ட ராப் டீசர் ரிலீஸ்!

சென்னை: நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உள்ளார். தென்னிந்தியாவில் நடன இயக்குநராக, நடிகராக ஜொலித்து வந்த பிரபு தேவா, ஒருகட்டத்திற்கு மேல் இந்தி சினிமாவுக்குச் சென்று அங்கும் நடன இயக்கத்தில் கோலோச்சி வருகின்றார். இதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் இயக்கவும் செய்கின்றார். இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான முதல் படமான போக்கிரி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதாவது ஜூன் 22-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பிரபுதேவா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட ராப். இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார்.

Prabhu Deva Vijay Sethupathi Sunny Leone Vedika

பேட்ட ராப்: இந்த படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் பெரும்பாலான மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என படக்குழு நம்புகின்றது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற நலம்தானா பாடலின் ரீமேக்கில் சிம்புவுக்கு இணையாக வேதிகா தனது அசாத்திய நடனத்திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் பிரபுதேவாவுக்கு இணையாக வேதிகா எந்த அளவுக்கு ஆடப்போகின்றார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Prabhu Deva Vijay Sethupathi Sunny Leone Vedika

டீசர் வெளியீடு: இந்நிலையில் படத்தின் டீசர் நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டு நேற்றே அதாவது ஜூன் 21ஆம் தேதியே படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார் என அறிவித்தது . அதன்படி பேட்ட ராப் படத்தின் டீசரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார். டீசரில் பிரபுதேவாவுடன் நடனமாட, நடனக் கலைஞர்களுக்கு இடையில் நடக்கும் போட்டிபோல் உள்ளது. மேலும் இந்த டீசரில் சன்னிலியோன் அந்தர் பல்டி அடித்து நடனமாடியுள்ள காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

Prabhu Deva Vijay Sethupathi Sunny Leone Vedika

கமர்ஷியல் ட்ரீட்: மேலும் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. பிரபுதேவா வேதிகாவுடன் நடனப் பயிற்சியில் ஈடுபடுவதைப் போலவும், சன்னிலியோனுடன் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடுவதைப் போலவும் காட்டப்பட்டுள்ளது. டீசரைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். வேதிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள வெப் சீரிஸான யாஷினி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Prabhu Deva Vijay Sethupathi Sunny Leone Vedika

கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனமாடுகின்றார் என்ற தகவல் கசிந்தது. இது தொடர்பாக உடனே விசாரித்த கேரள பல்கலைக்கழகம் அந்த நிகழ்ச்சியை உடனே ரத்து செய்தது பெரிய செய்தியாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Prabhu Deva Vijay Sethupathi Sunny Leone Vedika

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X