நடிகர் விஜய்யை தொடர்ந்து முன்னணி ஹீரோவுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. ரசிகர்கள் ஆவல்

சென்னை : 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Recommended Video

Vijaysethupathi & Parthiban Book Launch • சென்னையின் பொக்கிஷம்

பல வேடங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் விஜய் சேதுபதி அதனாலேயே மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் உண்டு .

அணைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்து அனைவரின் மனதிலும் நிற்கிறார் மாஸ்டர் வில்லன்.

அனைத்திற்கும் ரெடி

அனைத்திற்கும் ரெடி

நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி வில்லனாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடங்கள் ஆக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுகிறார் விஜய் சேதுபதி. அதனாலேயே அவருக்கு சினிமா துறையில் ஒரு நல்ல பெயரும், ரசிகர்களிடம் நல்ல மரியாதையும் , அதிகமாக படவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

எதிர்பார்ப்பு அதிகம்

எதிர்பார்ப்பு அதிகம்

விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார், விஜய்க்கு வில்லன் என்பதால் அப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம்

தெலுங்கில் பவன் கல்யாணுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் மெகா ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும் அதில் விஜய் சேதுபதி நடிக்க போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது .

மலையாளத்தில் ஹிட்

மலையாளத்தில் ஹிட்

மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என்றும், பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. படக்குழுவினரிடமிருந்தும் , விஜய் சேதுபதி தரப்பிலும் இது பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் இந்த செய்திகள் சமூகவலைதளம் மூலம் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் விஜய் சேதுபதி பல படங்களை கைவசம் வைத்திருப்பதனால் இது உண்மையாகத்தான் இருக்க கூடும் என்று பல தரப்பில் கூறப்படுகின்றது.

ரீமேக் செய்யப்பட்டு

ரீமேக் செய்யப்பட்டு

அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, என்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது , இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை, ஹிந்தியில் இப்படத்திற்கான உரிமையை பெற்றுள்ளார் ஜான் ஆபிரஹாம். அவரே அப்படத்தில் நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மலையாளத்தில் மெகா ஹிட்டானதால் , பிற மொழிகளிலும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்று எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X