Maharaja China Box Office: சீனாவில் பாகுபலியை பந்தாடும் விஜய் சேதுபதியின் மகாராஜா.. தாறுமாறு வசூல்!

சீனா: இந்திய சினிமாக்களில் நல்ல வரவேற்பைப் பெறும் படங்கள் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடுகின்றது. குறிப்பாக இந்திய சினிமாவில் இருக்கும் விமர்சன ரீதியாக வெற்றிப் படமாக மாறும் படங்களை சீனாவில் வெளியிட்டு, படத்தை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் உலக சினிமா ஆர்வலர்கள் களமிறங்குகின்றனர். அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் விஜய் சேதுபதியின் மகாராஜா. இந்தப் படம் சீனாவில் இரண்டு வாரங்களில் எவ்வளவு வசூல் குவித்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த படம் மகாராஜா. இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் ஆகும். படத்தில் அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன், திவ்ய பாரதி என பலர் நடித்துள்ளனர். படம் இந்தியாவில் வெளியானபோது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் விமர்சனங்களையும் சம்பாதித்தது.

vijay sethupathi maharaja

படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து பாசிட்டிவாக சமூக வலைதளங்களில் கூற படத்தின் வெற்றியில் இது முக்கிய பங்கு வகித்தது. படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநரான நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினார். படத்தின் திரைக்கதையும், பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கியகாரணமாக அமைந்தது.

மகாராஜா கதை: சலூன் கடை வைத்திருக்கும் தனது கதாநாயகன். மனைவியின் மரணத்திற்குப் பின்னர், தனது குழந்தையை தானே வளர்த்து ஆளாக்குகின்றார். இவரது மகளை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விடுகின்றார்கள். தனது மகளை யார் இவ்வாறு செய்தது என்பதைக் கண்டுபிடிக்க அப்பா எடுக்கும் முயற்சி. மேலும் குற்றவாளியைக் கண்டுபிடித்த பின்னர் என்ன ஆனது என்பதுதான் க்ளைமேக்ஸ். படத்தின் ஒவ்வொரு காட்சியும் , திரைக்கதை நகர்த்தலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

vijay sethupathi maharaja

சீனா வசூல்: இப்படியான நிலையில் படத்தினை சீனாவில் படக்குழு ரிலீஸ் செய்தது. படம் சீனா மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் நல்லாவே கல்லா கட்டி வருகின்றது. படம் இரண்டு வாரங்களில் மட்டும் ரூபாய் 64 கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் மேலும் சீனாவில் நல்ல வசூல் குவிக்கும் என்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் இதுவரை உலகம் முழுவதும் ரூபாய் 172 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் படத்தின் வசூல் 200 கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

vijay sethupathi maharaja

பாகுபலி: படம் இன்னும் 17 கோடிகளை வசூல் செய்தால், சீனாவில், அதிக வசூல் குவித்த டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில் இடம் பெறும். மேலும், தற்போது 10வது இடத்தில் 80.50 கோடிகளுடன் இருக்கும் பாகுபலி படத்தையும் பின்னுக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், படத்தினை ஜப்பானிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

vijay sethupathi maharaja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X