இந்த வம்பு தும்புக்கெல்லாம் என் தலைவன் தான் சரி: சிம்புவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி

By Siva

Recommended Video

தனது முதல் காதல் அனுபவம் பற்றி சிம்பு!-வீடியோ

சென்னை: இந்த வம்பு தும்புக்கெல்லாம் என் தலைவன் தான் சரி என்று கூறி சிம்புவை விஜய் சேதுபதி கை காட்டியுள்ளார்.

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்திற்கு இசையமைத்து தயாரித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் இசை வெளியீட்டு விழாவையே திருவிழா போன்று பிரமாண்டமாக நடத்திவிட்டார் யுவன்.

இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என்று பலர் கலந்து கொண்டனர்.

முதல் காதல்

முதல் காதல்

பியார் பிரேமா காதல் ஒரு காதல் படம் என்பதால் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களிடம் அவர்களின் முதல் காதல் பற்றி கேட்கப்பட்டது. விஜய் சேதுபதி தன் வாழ்வில் வந்து போன காதல்கள் பற்றி கூறினார். காதல் சிறப்பான உணர்வு என்று தெரிவித்தார். அடுத்ததாக அவரிடம் ஒரு கேள்வி கேட்க வில்லங்கமாக பதில் அளித்துவிட்டார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

மேடையில் விஜய் சேதுபதி அருகே நின்ற மகேஸ்வரி அவரை பார்த்து நான் தான் நீங்கள் ப்ரொபோஸ் பண்ணும் பொண்ணு, ப்ரொபோஸ் பண்ணுங்க என்றார். அதற்கு விஜய் சேதுபதியோ, அங்கே உட்கார்ந்திருக்கான் பாருங்க என் தலைவன், உங்களோட இந்த வம்பு தும்புக்கெல்லாம் அவன் தான் சரியான ஆளு, அவன்கிட்ட வெச்சுக்கோங்க என்று கூறி சிம்புவை கை காட்டிவிட்டார்.

ஐஸ்வர்யா

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மேடையில் சுமார் மூஞ்சி குமாரும், கொக்கி குமாரும் சேர்ந்து பேசினார்கள். தனுஷ், கொக்கு குமாரு வசனத்தை பேசிக் காண்பித்தார். முதல் காதல் பற்றி கேட்டதற்கு, மனைவி வந்திருக்காங்க என்று கூறி நைசாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

ரசிகன்

மேடைக்கு வந்த சிம்புவிடமும் முதல் காதல் பற்றி கேட்கப்பட்டது. சிம்பு என்ன சொல்லப் போகிறாரோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க அவரோ என் ரசிகர்கள் தான் என்னுடைய முதல் காதல் என்று கூறிவிட்டார். மேலும் லூசுப் பெண்ணே பாடலை பாடி அசத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X