Vijay Sethupathi: குடும்பத்துடன் சேட்டன்ஸ் லுக்கில் மாறிய விஜய் சேதுபதி... ஓணம் செலப்ரேஷன் ஓவர்!

சென்னை: கோலிவுட்டில் ரொம்பவே பிஸியான நடிகர்கள் விஜய் சேதுபதியும் ஒருவர்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், கேரளாவின் பாரம்பரியமான ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.

 Vijay Sethupathi: Makkal Selvan Vijay Sethupathi Celebrates Onam With His Son and Daughter

குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய விஜய் சேதுபதி: ஏராளமான படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள், விஜய் சேதுபதியின் கேரியரை உச்சத்திற்குக் கொண்டுச் சென்றது. அப்போது முதல் விஜய் சேதுபதி பிஸியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லன், மாஸ்டரில் விஜய்க்கு வில்லன், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லன் என வெரைட்டியாகவும் சம்பவம் செய்து வருகிறார் விஜய் சேதுபதி. அதேபோல், கடைசி விவசாயி, மாமனிதன், விடுதலை போன்ற படங்களும் விஜய் சேதுபதிக்கு விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. தற்போது அவர் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்தப் படம் மூலம் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தற்போது அவரது 50வது படமான மஹாராஜா, வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் விஜய் சேதுபதி.

 Vijay Sethupathi: Makkal Selvan Vijay Sethupathi Celebrates Onam With His Son and Daughter

தனது மகன், மகள் ஆகியோருடன் சேட்டன்மார்கள் லுக்கிற்கு மாறிவிட்ட விஜய் சேதுபதி, செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதியும் அவரது மகனும் வேஷ்டி, சட்டை அணிந்திருக்க அவரது மகள் தாவணியுடன் அழகாக காட்சியளிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன், மகள் இருவருமே தற்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி தனது குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடிய போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்க கமிட்டாகியுள்ளார். சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X